பிரதேசத்தில் உள்ள வறிய மாணவர்களின் நலன் கருதி சுமார் 2200 குடும்பங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த புதன் கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் அவரது இல்லத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கல்வியினால் மாத்திரமே ஒரு சமூகம் தலை நிமிர்ந்நு நிற்கமுடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் எமது பிரதேச மக்களின் கல்விக்காக பல உதவிகளை அன்று முதல்வராக இருந்த சந்தர்ப்பத்திலும் தற்பொழுதும் பல திட்டங்களை தனது சொந்தப்பணத்தின் மூலம் செய்து கொண்டு வருவதை இவ் கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் நன்றியோடு நினைவுகூர்ந்தனர்.
மேலும் எதிர்காலத்தில் இவ் "மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பினூடக" பல்வேறு சமூக நலன் சார்ந்த பல திட்டங்களை ஒவ்வொன்றாக செயல்படுத்த எண்ணியுள்ளதாகவும் இங்கு வருகை தந்த தாய் மார்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வு தற்போதைய நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக சுகாதாரத்துறையினரின் முழு வழிகாட்டுதலுக்கும் ஏற்ப ஒழுங்கு படுத்தி செயற்படுத்தப்பட்டதும் ஒரு சிறப்பம்சமாகும்.
இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் இவ் வேலைத்திட்டத்தினை முழுமையாக ஒழுங்கு செய்து செயற்படுத்திய அவரது செயலாளர்கள் நெருங்கிய ஆதரவாளர்கள் , மீராசாஹிப் மகளிர் நலன்புரி அமைப்பின் தலைவி ,செயலாளர் , உயர் பீட உறுப்பினர்கள் ,அங்கத்தவர்கள் அனைவருக்கும் விஷேட நன்றியினை முன்னாள் முதல்வர் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் அவர்கள் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment