பொகவந்தலாவ பொதுசுகாதார பிரிவில் மேலும் 09பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு இதுவரையிலும் பொகவந்தலாவ பொது சுகாதார பிரிவில் மாத்திரம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார அதிகாரி வை.பி.எல்.டி. பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (19.02.2021.) காலை வெளியான பி.சீ.ஆர். அறிக்கையின் ஊடாக இந்த ஒன்பது தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகாவித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயின்று வந்த மாணவன் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டமை அடுத்து அவரோடு தொடர்பினை பேணிவந்த ஆசிரியர்கள் பத்துபேர் உட்பட 105 பேருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டு மாதிரிகள் அனுப்பி வைக்கபட்டது. அதற்கமைவாகவே 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ, ஹொலிரோசரி தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் தரம்11 ஏ.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த அனைத்துமாணவர்களுக்கு இன்றைய தினம் 19/02 பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான ஒன்பது தொற்றாளர்களையும் கொரோனா சிசிச்சை நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையினை பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

0 comments :
Post a Comment