இருக்கும் இடத்தை விட்டுட்டு இல்லாத இடம்தேடும் TNA- இனியபாரதி.

வி.ரி.சகாதேவராஜா-

க்கியநாடுகள் சபைக்குச் சென்று இறந்தவர்களைத் தேடுவதை விடுத்து தற்போது உயிரோடு வாழ்ந்துவருபவர்களின் குறிப்பாக அநியாயமாக சிறையில் வாடும் முன்னாள் தமிழ்ப் போராளிகளின் எதிர் காலத்தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என அழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்தார்.
காரைதீவிலுள்ள அம்பாறை ஊடகமையத்தில் நேற்றுமாலை அவர் நடாத்திய ஊடகச்சந்திப்பிலேயே மேற்கண்டவாறு வேண்டுகோள்விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்:

நான் திட்டமிட்ட பழிவாங்கல் காரணமாக சிறைக்குச் சென்றிருந்தேன். இதுவரை என்மீது நீதிமன்றில் 11வழக்குகளைத் தொடுத்துள்ளார்கள். 

அனுராதபுரம் கொழும்பு காலி என பல சிறைச்சாலைகளுக்கும் சென்று தற்போது பிணையில் வந்துள்ளேன். அங்குள்ள முன்னாள் போராளிகள் படும் துயரம் கஸ்டங்கள் சொல்லில் அடங்காதவை.

செத்தவர்களைப் பற்றி பேசுவோர் எம் மண்ணிற்காகப் போராடிய உயிரோடுஇருக்கின்ற முன்னாள் போராளிகளையிட்டு பேசமுன்வராதது ஏன்?

சிறையில் வாடும் முன்னாள் போராளிகளை விடுதலைசெய்கிறேன் அனைவரும் என்னோடு இணைந்து பயணிக்கவாருங்கள் என்று அன்று பிரதமராகவிருந்த மகிந்தராஜபக்ச ததேகூட்மைப்பினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அன்று அவர்கள் அப்படிச் செய்திருந்தால் இன்று அவர்கள் விசாரணையின்றி வீணாக சிறையில்; வாடுவதை தவிர்த்திருக்கலாம்.

30வருடகாலம் போராட்டத்தை வைத்துஅரசியல் செய்தார்கள். இன்று காணாமல்போனோர் தமிழ்சிறைக்கைதிகளின் விடுதலை என்றுகூறி அரசியல் செய்கிறார்கள்.
பிள்ளையான் விடுதலை செய்யப்பட்டமை இவர்களுக்கு பலத்தஅவமானமாகும். அதே அடிப்படையில் முன்னாள் போராளிகளையும் விடுவிக்கலாம். ஆனால் அதனை எமது சட்டவல்லுனர்கள் செய்யமாட்டார்கள்.

மொத்தத்தில் நாட்டில் தமிழ்மக்களுக்கான அரசியல்தீர்வு தாதமாவதற்கும் ஜனாதிபதியின் 1லட்சம் வேலைவாய்ப்பில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் முன்னாள் போராளிகள் சிறையில் வாடுவதற்கும் காரணம்; வீரவசனம்பேசி மக்களை தொடர்ந்துஏமாற்றிவரும் த.தேகூட்டமைப்பினரே.

நாட்டில் தமிழ்மக்களுக்கு இன்னோரன்ன பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றை அரசோடு இணைந்து தீர்த்துக்கொள்வதுதான் உரியவழி.

ஜனாதிபதியின் ஒரு லட்சம் வேலைவாய்ப்பில் அம்பாறைமாவட்டத்தில் தமிழ்மக்கள் புறக்கணிக்கப்படுவதை நானறிவேன். 2000பேருக்காவது அதனை வழங்கியிருக்கவேண்டும். ஆனால் இதுவரை ஆக 25க்குள் உட்டபட்ட தமிழ் இளைஞர்களே உள்வாங்ககப்பட்டிருக்கிறார்கள். இதனையெல்லாம் தட்டிக்கேட்டவர்கள் யார்?

அம்பாறையில் அரசியல் அநாதையாக உள்ள தமிழ்மக்களுக்கான இத்தகைய பிரச்சினைகளை ஜனாதிபதி பிரதமருடன் பேசித்தீர்க்கமுடியும். 
ஆனால் இவைகளைச் செய்யமாட்டார்கள்.இதுதொடர்பாக இங்குள்ள தமிழ்ப்பிரதிநிதிகள் வாய்திறந்தார்களா? இல்லையே இனியுமா நம்புகிறீர்கள்.
அன்று நான் திருக்கோவில் கல்வி வலயம் மற்றும் கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தொடர்பில் அரசோடுபேசி தீர்வுக்கு வந்தேன்.வலயத்தை பெற்றெடுத்தேன். ஆனால் கனிந்துவந்த கல்முனை வடக்கு பிரதேசசெயலக தரமுயர்த்தலைத் தடுத்தார்கள்.

எதிர்வரும் கிழக்குமாகாணசபைத்தேர்தலில் போட்டியிட்டு தமிழ்மக்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கமுடியும். பேரம் பேசும் அந்த அரசியல்அதிகாரத்தினூடாக 1லட்சம் வேலைவாய்ப்போ தரமுயர்த்தலோ அத்தனையையும் செய்யமுடியும்.
எனவே அனைத்தையும் மறந்து ஒன்றுபட்டுபயணிப்போம் வாருங்கள் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :