கொடகே தேசியச் சாகித்திய விருது-2021

டந்த 20 வருடங்கள் இலங்கை இலக்கியத்தை வளர்தெடுக்கும் முகமாகவும், முன்னெடுத்துச் செல்லும் வகையிலும், வழங்கப்பட்டு வரும் கொடகே தேசிய சாகித்திய விருது இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் கடந்த 11 வருடங்களாக வழங்கப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த நாவல், சிறுகதை, கவிதை நூல்களில் சிறந்தவை தெரிவுசெய்யப்பட்டுக் கொடகே தேசிய சாகித்திய விருது வழங்கப்படவுள்ளது.

சிங்கள - தமிழ் மொழிகளில் இன ஐக்கியத்தையும், இனங்களிடையே நல்லுறவைக் கௌரவிக்கும் முகமாக 2020 ஆம் ஆண்டு
வெளிவந்த சிங்களத்திலிருந்து தமிழுக்கும், மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஒன்றுக்கும் இன ஐக்கியத்திற்கான மொழிபெயர்ப்பு நூலுக்கான கொடகே
தேசிய சாகித்திய விருது வழங்கப்படும். மூலநூல் இலங்கையில் வெளியிடப்பட்டுஇருத்தல் வேண்டும்.

2020 யில் நாவல், சிறுகதை, கவிதை ஆகிய துறையில் தன் முதல் நூல் வெளியிட்ட சிறந்த படைப்பாளி ஒருவருக்குக் கொடகே தேசிய சாகித்திய விருதுக்கான பணப்பரிசிலும், சான்றிதழும் வழங்கப்படும்.

அத்தோடு தமிழ் கலை இலக்கியத்திற்குப் பணியாற்றிய படைப்பாளி ஒருவருக்குக் கொடகே வாழ்நாள் சாதனை விருதும் வழங்கப்படவுள்ளது.

பரிசீலனைக்கு அனுப்பப்படும் நூல்கள் முதல் பதிப்பாக இலங்கையில் பதிப்பிக்கப்பட்டு இலங்கையில் ISBN பெற்றுக் கொண்ட நூல்களாக இருத்தல் வேண்டும்.

பரிசீலனைக்கு நூலின் மூன்று பிரதிகள் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ந்திகதிக்கு முன்னதாக நேரடியாகவோ, தபால் மூலமாகவோ கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :