ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் மழை காலத்தில் பெரிதும் பாதிப்பு


எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் மழை காலத்தில் பெரிதும் பாதிப்புக்களை அனுபவித்து வருகின்றனர்.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் எண்ணூற்றி ஐம்பது மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். வாழைச்சேனை பகுதியில் மூன்று கிராம சேவகர் பகுதியிலுள்ள ஒரேயொரு பெண்கள் பாடசாலையாக உள்ள இப்பாடசாலை பல வளப்பற்றாகுறையுடன் காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் வடிகான் ஒழுங்கு இன்மை காரணமாக மழை காலத்தில் வெள்ள நீர்கள் பாடசாலை வளாகத்தின் ஊடாக ஊடறுத்துச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இதனால் பாடசாலை சூழல் பாதிப்படைவதோடு, கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிரமமாகவே காணப்படுகின்றது என பாடசாலையின் மாணவிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பாடசாலை வகுப்பு கட்டடங்களினுள் தண்ணீர் புகுந்து காணப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்கள் தங்களது கல்வியை தண்ணீருக்குள் இருந்து கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 2014ம் ஆண்டு ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக பாடசாலை நூலகத்தினுள் வெள்ள நீர் புகுந்து நூல்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்பட்டதுடன், கணனி அறைக்குள்ளும் நீர் சென்று தளபாடங்கள் மற்றும் கணணிகள் என்பன சேதமடைந்து காணப்பட்டதாகவும் பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.

ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மழை நீரால் பாடசாலைக்கு பாதிப்பு ஏற்படுவதன் காரணமாகவும், குறித்த பகுதியில் வடிகான் ஒன்றை அமைத்துத் தருமாறு கோரி வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரிடம் அண்மையில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

மேலும் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறந்த கட்டட வசதிகள் இன்றி காணப்படுவதுடன், இங்கு உள்ள கட்டடம் பழமையாக காணப்படுவதால், இதில் இருந்து கல்வி கற்கும் போது பாரிய அச்சத்துடன் மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர்.

எனவே குறித்த விடயம் தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் நலனில் கருத்தில் கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முன்வருமாறு பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :