திருகோணமலை கும்புறுப்பிட்டியில் உழுந்து உற்பத்தி அறுவடை விழா



ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவின் கும்புறுப்பிட்டி தெற்கு கிராம சேவகர் பிரிவில் பயிரிடப்பட்ட உழுந்து உற்பத்தி அறுவடை இன்று(21) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.

அத்துடன் இப்பிரதேசத்தில் பப்பாசி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதையும் அரசாங்க அதிபர் களத்திற்கு சென்று மேற்பார்வை செய்ததுடன் பிரதேச விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தாம் இப்பிரதேச விவசாய செய்கையில் ஈடுபடும் போது உரிய வடிகாண்கள் இன்மையால் பயிர்ச்செய்கை பாதிக்கப்படுகின்றது.பாரம்பரியமாக செய்கைபண்ணப்பட்டுவந்த காணிகளை மீண்டும் பயிரிட அனுமதி தருமாறும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கு சந்தைவாய்ப்பைத்தருமாறும் அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்தனர்.

வடிகான்களை புனர்நிர்மாணம் செய்ய 10 இலட்சம் ரூபாயை ஒதுக்குவதாகவும் பாரம்பரியமாக செய்துவந்த பயிர்ச்செய்கை நிலங்களை பயிர்செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.அத்துடன் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான சந்தைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கான இணைப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இதன்போது அரசாங்க அதிபரால் கவனம் செலுத்தப்பட்டது.
கிராமிய உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் குறிப்பாக தற்போது இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களில் மாவட்டத்தில் உற்பத்தி செய்ய முடியுமான பொருட்களை விருத்தி செய்வது தொடர்பில் விரைவில் உரிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் இதன் மூலம் உயரிய நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
உழுந்து உற்பத்திக்கான அனுசரனையை அகம் மனிதாபிமான வள நிலையம் வழங்கியிருந்தது.
இந்நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் , குச்சவெளி பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன்,அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. லவகுசராசா,அதிகாரிகள், பிரதேசவாசிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :