தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார் தந்தை செல்வா அன்று: தமிழ் அரசியல் கைதிகளை கடவுள் பிரார்த்தனைதான காப்பாற்றும் இன்று! :ஜெயசிறில்: அரியநேத்திரன்:நிதான்சன்.


வி.ரி.சகாதேவராஜா-

ன்று தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்று சொன்னார் தந்தை செல்வா. இன்று தமிழ் அரசியல் கைதிகளை கடவுள் பிரார்த்தனைதான காப்பாற்றும் என்று நாம் சொல்கிறோம்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. கலையரசன் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் முன்னாள் பா.உ. பா.அரியநேத்திரன் இளைஞரணி உபசெயலாளர் அ.நிதான்சன் ஆகியோர் கூறினார்கள்.

நாவிதன்வெளி 15ஆம் கிராமம் முருகனாலயத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற தமிழ் அரசியல்கைதிகளை விடுதலைசெய்யுமாறு கோரும் இறை பிரார்த்தனை வழிபாட்டின்போது மேற்கண்டவாறு அவர்கள் ஊடகங்களுக்கு கருத்துரைத்தனர்.

முன்னதாக ஆலய விசேட பூஜையுடன் வழிபாடு இடம்பெற்றது.பின்னர் கருத்துரைகள் இடம்பெற்றன.
அவர்கள் மேலும் கூறுகையில்:

கடந்த பல வருடங்களாக எவ்வித விசாரணையுமின்றி சிறையில் 175க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இன்றைய அரசாங்கம் எத்தனையோ பேரை பலவழிகளிலும் விடுவித்துவருகின்றனர்.
ஆனால் தமிழ் அரசியல்கைதிகள் விடயத்தில் பாராமுகமாக அலட்சியம் காட்டிவருவது இனமுரண்பாட்டை ஊக்குவித்துள்ளது.

இன்று கொரோனா காலகட்டம்.சிறைக்கைதிகள் பலருக்கு கொரோனா வந்துள்ளது. எனவே இக்கைதிகளுக்கும் கொரோனா வரலாம். இவர்களது பெற்றோர் உறவினர்கள் வடக்குகிழக்கைச்சேர்ந்தவர்கள். அங்கு என்ன நடக்குதோ என்று தெரியாமல் அழுதுபுலம்பி வேதனையுடன் வாழ்ந்துவருகின்றனர்.

எனவே அவர்களை தயவுசெய்து அரசாங்கம் மனிதாபிமானரீதியில் விடுதலை செய்யவேண்டும். அதற்கான மனமாற்றத்தை எமது இறை பிரார்த்தனை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :