தேசிய காங்கிரஸின் பிரதேச சபை உறுப்பினர் மக்கள் காங்கிரஸில் இணைவுபைஷல் இஸ்மாயில் -
தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏபி.பதூர்தீன் அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தேசிய காங்கிரஸில் இருந்து விலகி மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தேசிய காங்கிரஸின் தலைமை சமூகம் சார்ந்த எந்த தீர்மானங்களையும் எடுக்காமல் தனது சுயநலம் சார்ந்தவைகளுக்கே முன்னுரிமையளித்து வரும் நிலையே தொடர்ச்சியாக காணப்படுகிறது. இந்த அரசாங்கம் எப்படி பட்டதென்று தெரிந்தும் இந்த அரசாங்கம் வரவேண்டும் என்பதற்காக எங்களையும் மக்களையும் பிழையாக வழி நடாத்தினார்.
இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ விடயங்களை செய்தபோதும் ஒரு வார்த்தை கூட பேசாமல் வாய் மூடி மொளனியாகவே இருந்து வருகின்றார். அதுமாத்திரமல்லாமல் இந்த அரசாங்கம் எந்த வகையான அனுகுமுறைகளை கடைப்பிடித்தாலும் அவரால் எதையுமே துணிந்து நின்று கேள்வி கேட்க முடியாது என்பதை நாங்கள் நன்றாக அறிந்துகொண்டோம்.
கட்சியைக் கூட சிறந்த முறையில் வழி நடாத்த முடியாத நிலைமையிலே அவர் காணப்படுகிறார். கட்சிக்கென்று எந்த கட்டமைப்புமே இல்லை. ஒரு தனி நபருக்காக மாத்திரமே தேசிய காங்கிரஸ் கட்சி என்ற நிலையே உள்ளது. அவரை யாரும் சந்திக்க முடியாது. அவருடைய தேவைக்காகத்தான் நாங்கள் சந்திக்க முடியும். மக்கள் பிரச்சினை அவரிடம் இடமில்லை.
அவருடைய வெற்றிக்காக பல இலட்சம் ரூபாக்களை செலவு செய்த போதும் அது எந்தவித பயனையும் எனக்கோ மக்களுக்கோ இதுவரை பெற்றுத்தரவில்லை. இப்படியான சூழ்நிலையில்தான் எனது வட்டார மக்களின் ஆலோசனையின் பிரகாரம் நான் மக்கள் காங்கிரஸில் நேற்றயை தினம் பொத்துவிலில் இணைந்து கொண்டேன்.
மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதூர்தீன் முஸ்லிம் சமூகத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் கரங்களை பலப்படுத்துவது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதை உணர்ந்து மக்கள் காங்கிரஸின் தலைமையின் அறிவறுத்தலுக்கமைவாக மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபி ஊடாக அக் கட்சியில் இணைந்து கொண்டேன் என பதூர்தீன் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :