நாட்டிலும் சர்வதேசத்திலும் நடக்கும் சிவில் சமூக அழுத்தங்கள் மற்றும் வெளிநாட்டு அழுத்தங்களால்; எரிப்பது நிறுத்தப்பட்டால் - அதில் நனைந்துகொள்வார். அதற்காகவே இப்போது
சகோ. றிசாட்டை ஒட்டுமொத்த முஸ்லிம் தீவிரவாத முகமாக முத்திரை குத்தி வைத்திருப்பதால் (எனக்கு அதில் உடன்பாடில்லை); அவரின் குரலுக்கு அரசாங்கம் தலைசாய்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கும்.
அல்லது அவரின் மீதான நெருக்குவாரங்களை தவிர்க்க அவரே சற்று பின்வாங்கலாம். பின் வாங்குவதை அவதானிக்கவும் முடிகிறது.
அரசாங்கத்திற்கு 20 ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்திய (மு.கா & அ.இ.ம.கா) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்; பசில் ராஜபக்ச நீதிமன்றத்தினூடாக ஜனாஸா எரிப்பை தடுக்க உதவுவதாக கூறியும் நடைபெறாததால்; தாங்கள் ஏமாற்றுப்பட்டு விட்டோம் என்ற முடிவிற்கு வந்துவிட்டனர்.
இனி நடப்பது நடக்கட்டும் - நமக்கு றோட்டு கொந்தராத்துகளும்; லேபர் நியமனங்களும் கொஞ்சம் கிடைத்திருப்பதால் - இப்போதைக்கு சத்தமில்லாமல் சமாதியடைவோம் என்று எண்ணியுள்ளதைக் காணலாம்.
அரசாங்கத்திற்குள்ளிருக்கும் (SLPP) முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் தேசியப்பட்டியல்காரர்கள். அதாவது, மூக்கணம் குத்தப்பட்டு; அதன் கையிறு எந்நேரமும் இழுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதனால், அவர்கள் மௌனத்தில் ஆழ்ந்துவிட்டனர்.
இப்படி, எல்லோரும் ஏதோவொரு காரணத்தால் மௌனமான போதும்; கடந்த வருட ஏப்ரல் மாதத்தில் இருந்து - ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக - அதிகார மட்டத்தினரிடம் பேசியதில் தொடங்கி - நீதிமன்றம் சென்று - பாராளுமன்றத்தில் மன்றாடி - பகிரங்கத்தில் வீதிக்கிறங்கி போராடிய ஒரே ஒருவர் றஊப் ஹக்கீம் மாத்திரம்தான்.
அவர் ஜனாஸா எரிப்பு / நல்லடக்கம் தொடர்பில் இரண்டவதாக நியமிக்கப்பட்ட நிபுனர் குழு - “ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க முடியும்” என்ற பரிந்துரை வழங்கி இருப்பதை - சுமார் ஒரு வார காலமாக மறைத்து வைத்திருக்கும் அரசின் - “நேர்மையற்ற ஓரவஞ்சமான தன்மையை” கேள்விக்குட்படுத்தி - அந்த அறிக்கையை அரசாங்கம் “பகிரங்க பார்வைக்கு” முன்வைக்க வேண்டும் எனக்கோரியதை - குறை காண்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.





கடந்த 09 மாதங்களாக எரிக்கப்படும் ஜனாஸா விடயத்தில்; அரசாங்கத்தோடு இருந்துகொண்டு / ஆதரவு செய்து கொண்டு - இதுவரையிலும் ஒரு மயிரை கூட புடுங்க முடியாத அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் - மு.கா தலைவரை குறைகாண்பதாயின் - அவர்கள் இதுவரை புடுங்கியவற்றை பட்டியலிடட்டும். அதன் பின்னர் றஊப் ஹக்கீமில் குறைகாண வரட்டும்.
இது;
“DO or DIE” என்ற நிலை.
நக்குபவர்கள் நக்குங்கள்.
நாங்கள் போராடுவோம்.
################
மரம் மண்டியிடாது .......................
விழுந்தால் வேரோடுதான்;
மரம் மண்டியிடாது
நிமிர்ந்த தலையும்
நேர்கொண்ட பார்வையும்
நெஞ்சுரமும் கொண்ட மரம் – இது
ஆணவம் களைந்த
அகங்காரம் திறந்த
ஆண்மையுள்ள மரம் – இது
விழுந்தால் வேரோடுதான்;
இந்த மரம் - மண்டியிடாது
ஒற்றை வேரில் -இது
உறுதியாய் நிற்கும் மரம்
பட்டை முற்றிய
பச்சை மரம்
காய்ந்து வற்றி
கருகிய மரமல்ல
காடாய் வளர்ந்து நிற்கும்
கருங்கல்லி மரம்
காற்றுக்கு இது சாயாது
கடுகளவேனும் முறியாது
முட்டினால் மூக்குடையும்
முன்னம் பல்லும் கழன்று விழும்
வெட்டுண்டும்
வீரமே மண்ணில் வீழும்
விண்ணாங்கின் ரகம் – இது
சண்டிக் குதிரைகளை
சந்தித்தும் நின்ற மரம்
பண்டிச் சம்பாக்களுக்கா
பயப்படும்?
காட்டு வெள்ளமே
அஞ்சும் மரம்
வெறும் காற்று மழையிலா
கலங்கி நிற்கும்
விழுந்தால் வேரோடுதான்
இந்த மரம்
யாரிடமும் மண்டியிடாது
- ஏ.எல். தவம் -
0 comments :
Post a Comment