பிரதியுபகாரமாக தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவு வழங்குவோம்.முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது-
டகிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் உரிமை போராட்டம் நடாத்திய காலங்களில் பெரும்பான்மை முஸ்லிம்கள் சிங்கள ஆட்சியாளர்களுக்கே தொடர்ந்து ஆதரவு வழங்கினர்.

வடகிழக்கில் உள்ள முஸ்லிம்களும் விடுதலை போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கியிருந்தால், தமிழர்களின் போராட்டத்தினை ஒருபோதும் தோல்வியடைய செய்திருக்க முடியாது. மாறாக அது இலக்கை அடைந்திருக்கலாம்.

தமிழர்கள் இராணுவரீதியில் பலமாக இருக்கும்வரை சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை அரவணைத்து செயல்பட்டார்கள்.

ஆனால் தமிழர்களின் விடுதலை போராட்டம் தோல்வியடைந்து போராளிகள் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்பு ஆட்சியாளர்கள் முஸ்லிம்களை கருவறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதாவது யாரை முஸ்லிம்கள் நம்பினார்களோ அவர்கள் இன்று முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்க ஆரம்பித்ததுடன், மார்க்க விடயத்திலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றார்கள்.

அண்மைக்காலமாக ஜனாஸா விவகாரம் உற்பட முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு முஸ்லிம் பிரதிநிதிகளைவிட தமிழ் பிரதிநிதிகளே மிகவும் உணர்புபூர்வமாக குரல்கொடுத்து வருகின்றார்கள்.

எனவே மரணித்த தமிழர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்ட நினைவுத் தூபியை பலாத்காரமாக உடைத்ததன் காரணமாக தமிழர்கள் நீதியை கோருகின்றனர். இதற்காக முஸ்லிம்களாகிய நாங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுதான் தமிழர் தரப்புக்கு செய்திகின்ற பிரதியுபகாரமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :