விவசாய சட்டங்களுக்கு எதிராக பேராவூரணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!"விவசாயிகளின் விரோதி மோடி" என்ற பிரச்சாரத்தை முன்னிட்டு வேளாண் சட்டத்தை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும், தஞ்சை வடக்கு மாவட்டம் பேராவூரணி தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொதுச்செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் இத்ரீஸ்கான் வரவேற்றார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், எஸ்டிபிஐ தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் புஹாரி, பேராவூரணி சட்டமன்ற தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சிங்காரம், தி.மு.க முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் குமார், தமிழக மக்கள் புரட்சி கழகம் தலைவர் அரங்க.குணசேகரன் மனிதநேய ஜனநாயக கட்சி மாநில விவசாய அணி செயலாளர் சலாம், அறநெறி மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் ஆயர் த.ஜேம்ஸ், திராவிட கழக மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், திராவிட விடுதலைக் கழக மாவட்ட அமைப்பு செயலாளர் சித.திருவேங்கடம், கடைமடை பகுதி விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஃகைபா நவீன், மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட கவுன்சிலர் இலக்கியா நெப்போலியன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் பசீர், செரியலூர் இனம் ஊராட்சி மன்றத்தலைவர் ஆலங்குடி எம்.எஸ். ஜியாவுதீன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

இறுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் முகமது அஸ்கர் நன்றி கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :