திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி மாத்திரம் 10 கொரோனா தொற்றார்கள்எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி மாத்திரம் 10 கொரோனா தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் வெள்ளிக்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நபர்களும் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 நபர்களும் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1 நபருமாக 10 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 28ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் 5
பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் முன்னைய பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சம்பந்தப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இதேவேளை திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 29 ஆம் திகதி 17 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நபர் நகர் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருபவர்.

2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சைக்காக வந்த 54 வயதுடைய நபரொருவருக்கு என்டிஜன்ட் பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட என்டிஜென் பரிசோதனையின் மூலம் 03 பேர் நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் வேலை செய்பவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை திருகோணமலை மாவட்டத்தின் 127 கொவிட் 19 தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :