கல்முனை செய்லான் வீதி முதல் நீதிமன்ற வீதி வரை..! LockDown அம்பலத்துக்கு வந்த உண்மை.!

ஏ.எச்.எம்.பூமுதீன் -
ல்முனை செய்லான் வீதி முதல் நீதிமன்ற வீதி வரையான பகுதி LockDown செய்யப்பட வேண்டும் என்று - அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பரிந்துரை செய்த சுகாதார துறை - அதனை நடைமுறைப்படுத்தாமை தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

சுகாதார துறையினரின் பரிந்துரையை - அரசாங்க அதிபர் - இன்று கல்முனை பிரதேச செயலாளருக்கு மேலதிக நடவடிக்கைக்காக அனுப்பியுள்ளதை அடுத்தே இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்துள்ளது.

கல்முனை Lockdown விடயத்தை RDHS தன்னிச்சையாக கையாள்வதும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது.

11 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது கல்முனையில் Lockdown..

ஆனால் , இவற்றில் கல்முனைக்குடி 1,2 மற்றும் கல்முனை 1,3 ஆகிய முஸ்லிம் பகுதிகள் மட்டுமே ( செய்லான் வீதி முதல் வாடி வீதி வரை) முடக்கப்பட்டுள்ளது.

ஏனைய 7 கிராம சேவகர் பிரிவுகளும் திறந்தே உள்ளன.

அரச நிவாரணம் - இந்த 11 பிரிவுகளுக்குமே வழங்கப்படவும் உள்ளது.

அரசாங்க அதிபரின் கடிதத்தில் 28.12.2020 முதல் 14 நாட்கள் Lockdown செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை RDHS தொடர்பில் அண்மைக்காலமாக மக்கள் சந்தேகம் வெளிப்படுத்தி வருவதை - இந்த சம்பவம் உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது..

மேற்சொன்ன - மறைக்கப்பட்ட வீதி ஒருபக்கம் இருக்க - கல்முனைகுடி மற்றும் கிரீன்பீல்ட் பகுதிகளில் நேற்று (30) Antigen Test செய்து 15 பேருக்கு தொற்று என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :