மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை வை.எம்.எம்.ஏ.பேரவை கடுமையாக எதிர்க்கிறதுபேரவையின் தேசியத் தலைவர் ஸஹீட் எம்.றிஸ்மி.
எஸ்.அஷ்ரப்கான்-
கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதை வை.எம்.எம்.ஏ. பேரவை கடுமையாக எதிர்க்கிறது என்று அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் ஸஹீட் எம்.றிஸ்மி தெரிவித்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் அவசர நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கொழும்பு தலைமையகத்தில் நடைபெற்றபோது, இத்தீர்மானம் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் மேலும் இது விடயமாக குறிப்பிடும்போது,

கொவிட்-19 தொற்றின் காரணமாக மரணிக்கும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவுக்கு அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்கு அல்லது வெளிநாட்டுப் பிரதேசமொன்றுக்கு அனுப்புவதை வன்மையாக எதிர்ப்பதற்கு ஏகமனதாகத் எமது உயர்பீடத்தால் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், மனிதாபினமான உதவிக்காகவும் எமது துக்கத்தில் பங்குகொள்வதையிட்டும் மாலைதீவு குடியரசின் அரசாங்கதிற்கும் மாலைதீவு மக்களுக்கும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்குத் தங்களது நிலத்தை வழங்க முன்வந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியமையானது இஸ்லாத்தின் போதனைகளில் உள்ள அன்பு, சமாதானம், சாந்தி மற்றும் சகோதரத்துவத்தையே வெளிப்படுத்துகின்றன.

இலங்கை முஸ்லிம்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது தாய்நாடாகக் கொண்டுள்ள இந்த நாட்டுடன் மிகவும் ஆழமான தொடர்பைக் கொண்டிருப்பதாக எமது வை.எம்.எம்.ஏ. பேரவை உறுதியாக நம்புகின்றது. தாங்கள் பிறந்து பாரம்பரியமாக வாழ்கின்ற இந்தப் பூமியில் தவிர வேறு எந்த பூமியிலும் மரணிக்கும் உடல்கள் அடக்கப்படுவதை அவர்கள் நினைத்துப்பார்க்கவும் மாட்டார்கள். அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழு முஸ்லிம்களின் உடல்களை மட்டுமல்லாது தமது அன்புக்குரியவர்கள் மரணித்தால் அவர்களது உடல்களை அடக்கம் செய்ய எதிர்பார்த்திருக்கும் பெளத்த, இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களினதும் சமய, கலாசார மற்றும் சம்பிரதாயத் தேவைகள் தொடர்பில் கவனத்தில் கொள்வார்கள் என்று எமது பேரவை உறுதியாக நம்புகின்றது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களுக்கு இணங்கிய முறையில் எமது தாய்நாட்டில் கொவிட்-19 தொற்றின் காரணமாக மரணித்த எமது அன்புக்குரியவர்களை அடக்கம் செய்யக் கூடிய விதத்தில் தொழில்நுட்பக் குழு கிட்டிய எதிர்காலத்தில் சாதகமான ஒரு முடிவை வெளியிடும் என்று வை.எம்.எம்.ஏ. பேரவை உறுதியாக நம்புகின்றது. அனைத்துப் பிரசைகளுக்கும் அவர்களின் இறுதி உரிமைகளை வெளிநாடொன்றுக்கு வழங்குவதன் ஊடாக இலங்கை அரசாங்கம் தனது கடமைகளைப் புறக்கணிக்கமாட்டாது என்று அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை நம்புகின்றது. அவ்வாறு செய்யுமாயின், அது கெளரவமான பிரியாவிடைக்கான ஏற்பாடுகளைச் செய்வதிலுள்ள இயலாமையை ஏற்றுக் கொண்டதாக அமையும். அவர்களும் இந்த நாட்டு மக்களாக உள்ள அதேவேளை மரணிக்கும் பிரசைகளை கைவிட்டு அவர்களின் இறுதிக் கடமைகளை நிறைவேற்றுவதற்கு மற்றொரு நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டால், பெருமைமிகு எமது நாட்டின் இறைமை விடயத்தில் அது துக்ககரமான ஒரு நாளாக அமையும். பாதுகாப்பாக அடக்கம் செய்வதை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் சமூகம் உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும் எமது சுகாதார அமைச்சினாலும் வழங்கப்படும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் அவற்றுக்கு இணக்கமாக நடக்கும் என்று அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. சம்மேளனம் உறுதியளிக்கின்றது.

கொவிட்-19 தொற்றின் காரணமாக மரணித்த அல்லது அந்த தொற்றின் காரணமாக மரணித்ததாகச் சந்தேகிக்கப்படும் இலங்கை முஸ்லிம்களின் உடல்களை மாலைதீவின் தீவொன்றில் அடக்கம் செய்வதற்கு மாலைதீவு அரசாங்கம் முன்வைத்துள்ள ஆலோசனையையும் எதிர்காலத்தில் வேறு ஏனைய நாடுகளால் முன்வைக்கப்பட முடியுமான அத்தகைய ஆலோசனைகளையும் கெளரவமான முறையில் நிராகரிக்குமாறு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றது.


YMMA Objects to Sending Bodies of Sri Lankan Muslim Covid-19 Victims Overseas for Burial 

The All Ceylon Young Men’s Muslim Association Conference (ACYMMAC) at its Emergency Executive Committee Meeting held on 13th December 2020 unanimously decided to emphatically and unequivocally object to sending the bodies, of Sri Lankan Muslims who die of or suspected to have died of Covid-19, to the Maldives or any other country or foreign territory. Meanwhile, ACYMMAC greatly appreciates and is sincerely grateful to the Government and the people of the Republic of Maldives for their humanitarian concern and for sharing in our moment of grief. This expression of their unstinted solidarity by offering their land for the burial of Muslim bodies epitomises the love, peace, serenity and brotherhood in the teachings of Islam.The ACYMMAC is of the strong conviction that the Muslims of Sri Lanka are deeply rooted to the soil of this country, which has been their Motherland for more than a thousand years. Under no circumstances would they consider to be buried other than in the soil in which they were born and bred.The ACYMMAC is confident that the members of the Technical Committee appointed by the Government would address their minds to the religious, cultural and traditional concerns of not only the Muslim community but, also, those in other communities namely Buddhists, Hindus and Christians who would prefer a burial of their loved ones.The ACYMMAC firmly believes that the Technical Committee will announce a favourable decision, in the near future, enabling the burial of our loved ones who have died of COVID-19 infection in our own Motherland in compliance with the Guidelines issued by the World Health Organisation (WHO).The ACYMMAC is of the firm conviction that the Government of Sri Lanka would not abdicate its duty, to provide all its citizens their due last rights, to a foreign country as it would be tantamount to an admission of its inability to facilitate the dignified farewell of its citizens and that it would be a sad day for the sovereignty of our proud Motherland if it was to give up and handover any of its deceased citizens to another country to carry out their last rights.“more”The ACYMMAC assures that it will take steps to ensure that the Muslim community abide by and adhere to the Guidelines set out by the World Health Organisation and our Ministry of Health to ensure safe burial.The ACYMMAC calls on the Government of Sri Lanka to politely turn down the offer by the Government of the Republic of Maldives to bury the bodies of Sri Lankan Muslims who die of or are suspected to have died of Covid-19 in one of their islands and to do so in respect of any other such offers which may be made in future by any other country.

All Ceylon YMMA ConferenceSaheed M RismyNational PresidentT. 011 269 4075F. 011 267 6889E. acymmac@gmail.com np@ymma.lk
..........................................................................................................................................


මාධ්‍ය නිවේදනය

කොවිඩ් -19 හේතුවෙන් මරණයට පත්වන්නන්ගේ දේහයන් භූමදානය සඳහා විදේශ රටකට යැවීමට වයි.එම්.එම්.ඒ. විරුද්ධ වේකොළඹ - 2020 දෙසැම්බර් 14 වන දින, කෝවිඩ් -19 හේතුවෙන් මියයන හෝ මරණයට හේතුව කෝවිඩ් -19 යි සැක කරන ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරුන්ගේ මළ සිරුරු මාලදිවයිනට හෝ වෙනත් රටකට හෝ විදේශීය ප්‍රදේශයකට යැවීමට දැඩි ලෙස හා නිසැකවම විරුද්ධ වීමට, සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය (ACYMMAC) 2020 දෙසැම්බර් 13 වන දින පැවති හදිසි විධායක කමිටු රැස්වීමේදී, ඒකමතිකව තීරණය කර ඇත.මේ අතර, මානුෂීය සැලකිලිමත්බව සහ අපගේ සංවේගය බෙදා ගැනීම සම්බන්ධයෙන් මාලදිවයින ජනරජයේ රජයට සහ ජනතාවට සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය බෙහෙවින් ස්තූතිය පළ කරයි. ඔවුහු මුස්ලිම් සිරුරු භූමදානය කිරීම සඳහා ඔවුන්ගේ භූමිය ලබා දීමෙන් සහයෝගීතාවය ප්‍රකාශය කිරීම ඉස්ලාම් ධර්මයේ ඉගැන්වීම්වල ඇති ආදරය, සාමය, සන්සුන් භාවය සහ සහෝදරත්වය නිරූපණය කරයි.ශ්‍රී ලංකාවේ මුස්ලිම්වරු වසර දහසකට වැඩි කාලයක් තිස්සේ ඔවුන්ගේ මව්බිම ලෙස සැලකෙන මේ රටයි මුස්ලිම්වරු අතර සමඟ ඉතා ගැඹුරු සම්බන්ධයක් පවතින බව සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය දැඩිව විශ්වාසය කරයි. තමන් ඉපදුණු සහ පාරම්පරිකව වාසය කරන මෙම භූමියේ හැර වෙනත් කිසිදු රටක භුමදානය වීමට ඔවුන් සිතා බැලීමටවත් පෙළඹන්නේ නැත. රජය විසින් පත් කරන ලද තාක්ෂණික කමිටුවේ සාමාජිකයින් මුස්ලිම් ප්‍රජාවේ අවශ්‍යතාව පමණක් නොව, තමන්ගේ ආදර වන්තයන් මිය ගිය විට භුමදානය කිරීමට කැමැති බෞද්ධ, හින්දු සහ කිතුනු ජනතාවගේ ද ආගමික, සංස්කෘතික හා සාම්ප්‍රදායික අවශ්‍යතා පිළිබඳව ද අවධානය යොමු කරනු ඇතැයි සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය විශ්වාස කරයි. .ලෝක සෞඛ්‍ය සංවිධානය (WHO) විසින් නිකුත් කරන ලද මාර්ගෝපදේශයන්ට අනුකූලව අපේ මව්බිමෙහි COVID-19 ආසාදනයෙන් මියගිය අපගේ ආදරණීයයන් භූමදානය කිරීමට හැකිවන පරිදි තාක්ෂණික කමිටුව නුදුරු අනාගතයේ දී හිතකර තීරණයක් ප්‍රකාශයට පත් කරනු ඇතැයි සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය තරයේ විශ්වාස කරයි.සියළුම පුරවැසියන්ට ඔවුන්ගේ අවසන් අයිතිවාසිකම් විදේශ රටකට ලබා දීම හරහා ශ්‍රී ලංකා රජය සිය රාජකාරිය පැහැර හරිනු නොලබන බව සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය විශ්වාස කරයි, එවැන්නක් සිදු කරන්නේ නම් එය ගෞරවනීය සමුගැනීමට පහසුකම් සැලසීමට ඇති නොහැකියාව පිළිගැනීම හා සමාන වනු ඇත. ඔවුන් එහි පුරවැසියන් වන අතර, මියගිය පුරවැසියන්ගෙන් කිසිවෙකු අතහැර දමා ඔවුන්ගේ අවසන් අයිතිවාසිකම් ඉටු කිරීම සඳහා වෙනත් රටකට භාර දෙන්නේ නම්, අපගේ ආඩම්බර මව්බිමේ ස්වෛරීභාවයට එය කනගාටුදායක දිනයක් වනු ඇත.ආරක්ෂිතව භූමදානය කිරීම සහතික කිරීම සඳහා මුස්ලිම් ප්‍රජාව ලෝක සෞඛ්‍ය සංවිධානය සහ අපගේ සෞඛ්‍ය අමාත්‍යාංශය විසින් නියම කරන මාර්ගෝපදේශ පිළිපැදීමට හා ඒවාට අනුගත වීමට වගබලා ගන්නා බව සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය සහතික කරයි.කොවිඩ් -19 ආසාදනය වීම හේතුවෙන් මියගිය හෝ එම ආසාදනය වීම හේතුවෙන් මියගිය බවට සැක කෙරෙන ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරුන්ගේ සිරුරු මාලදිවයිනේ එක් දූපතක භූමදාන කිරීම සඳහා මාලදිවයිනේ රජය විසින් කරන ලද යෝජනාව සහ අනාගතයේදී වෙනත් යම් රටක් විසින් ඉදිරිපත් විය හැකි වෙනත් එවැනි යෝජාන ද ආචාරශීලීව ප්‍රතික්ෂේප කරන ලෙස සමස්ථ ලංකා වයි.එම්.එම්.ඒ සම්මේලනය ශ්‍රී ලංකා රජයෙන් ඉල්ලා සිටී.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :