கோவிட் - 19 பரிசோதனை விமர்சகர்கள் கூறுவது போல் ஒரு கஷ்டமான விடயமல்ல.-ஸக்கி தெரிவிப்பு.


நூருல் ஹுதா உமர்-

கோவிட் - 19 பரிசோதனைக்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி எனவும் இன்று அக்கரைப்பற்று நகர பிரிவு -1 ல் இடம்பெற்ற எழுமாறான பரிசோதனைகளுக்கு ஆர்வமாய் வந்து கலந்துகொண்டு, சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கிய எனது வட்டார நகர் பிரிவு - 1 மக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் எனது நன்றிகளை தெரிவிக்கின்றேன் என அக்கரைப்பற்று .மாநகர சபை முதல்வர் அதாவுல்லா அகமட் ஸகி தெரிவித்துள்ளார்.

தாமாக முன்வந்து கோவிட் - 19 பரிசோதனையை தனக்கு செய்துகொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் விமர்சகர்கள் கூறுவது போல் பரிசோதனை என்பது ஒரு கஷ்டமான விடயமல்ல. அது மிகவும் இலகுவானதே என்பதை விளங்கி இருந்தாலும் இன்று அதை நானும் அனுபவரீதியாக அறிந்து கொண்டேன்.

இதே போல் ஏனைய பிரதேச மக்களும் பரிசோதனைகளுக்கு ஆர்வத்துடன் கலந்துகொண்டு எமது மாநகரை முழுமையாக விடுவிக்க உதவ வேண்டும் என கேட்கிறேன். என்பதுடன் இன்றைய நிகழ்விற்கு என்னோடு துணையாக இருந்த எனது வட்டார குழு உறுப்பினர்களுக்கும், சுகாதார துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.





UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL

+94 766735454 / +94 757506564
umarhutha@gmail.com
abukinza4@gmail.com



2 Attachments
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :