கொரேனா தொற்றுநோயை தடுக்க விசேட செயலணி அவசியம் - கல்முனையில் அவசர உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்


ஏ.எல்.எம். ஷினாஸ்-

கிழக்கு மாகாணத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதை தடுக்கும் உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டம் ஒன்று கிழக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ. லதாகரன் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் (18) இரவு நடைபெற்றது.

கல்முனை பராந்தியத்தில் (18.12.2020) வரை 585 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்ந்து கூடுதலான பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்றங்களை இனங்காண வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது என இங்கு உரையாற்றிய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கல்முனையில் கொரோனா தொற்று நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்காக கிராம மட்டங்களில் கொரோனா தடுப்பு குழுக்களை அமைத்து தீவிர நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் , சுகாதார சட்ட விதிமுறைகளை மீறி நடப்போர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிசாரும் இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

கலந்து கொண்ட திணைக்களங்களின் தலைவர்களும் தமது கருத்துக்களை தெரிவித்தனர். கல்முனை பிராந்தியத்தில் அக்கரைப்பற்று கொத்தனிக்கு பிறகு கல்முனையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை பாரதூரமானதாகும். எனவே இதனை வேகமாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குணசிங்கம் சுகுணன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே. ரத்நாயக்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஜெயரத்ன, 241 வது இராணுவ படைப்பிரிவின் பிரிகேடியர் கொமாண்டர் விமல் ரத்நாயக்க, கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எச் சுஜித் பிரியந்த, கல்முனை இராணுவ முகாம் கொமாண்டர் மேஜர் தர்மசேன, கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ. எம் றகீப், அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாவுல்லா சக்கி ,உட்பட சுகாதார சேவை வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலர் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :