இந்திய அரசின் 2400 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்அஷ்ரப் ஏ. சமத்-
ந்திய அரசாங்கம் இலங்கையில் வீடுகள் அற்ற மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 2400 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக 1.2 பில்லியன் ரூபாவினை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேற்படி திட்டத்தின் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (18.12.2020) வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் இந்திய உயா் ஸ்தாணிகர் கோபால் பகலே, வீடமைப்பு நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளா் கே.ரீ.அபேகுணவா்த்தன ஆகியோா்களுக்கிடையில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந் நிகழ்வில் வீடமைப்பு நிர்மாண்த்துறை கட்டிடப்பொருட்கள் இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தவும் கலந்து கொண்டாா்.
இந்திய உயா்ஸ்தாணிகா் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட ஊடகச் செய்தியில் - இலங்கையில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 24 மாவட்டங்களிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கவென இந்திய அரசாங்கம் இவ் ஆண்டும் 2400 வீடுகள் நிர்மாணிக்கவென இலங்கை ரூபா 1.2 பில்லியன் மொத்த உதவித் தொகையாகும். 600 வீடுகள் சகல மாவட்டங்களிலும் மாதிரிக் கிராமங்கள் ஊடாக நிர்மாணிக்கப்படும். அத்துடன் 1200 வீடுகள் வட கிழக்கு உட்பட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாக நிர்மாணிக்கப்படும். ஏற்கனவே 96 வீடுகள் கொண்ட கிராமங்கள் தென்மாகணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. 600 வீடுகள் வடக்கு மாகாணத்தில் மாதிரிக்கிராமங்கள் எனும் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசாங்கம் ஏற்கனவே இலங்கைக்கு வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டமும், தோட்டப் பகுதி வாழ் மக்களுக்காக 10ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்திற்கு தொடா்ந்தும் கட்டம் கட்டமாக இலங்கை அரசு தமது திட்டங்களை பூா்த்திசெய்ததும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசு இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அமெரிக்க டொலா் 3.5 பில்லியன் கடன் திட்டத்தில் உதவி வருகின்றது. அத் தொகையில் அமெரிக்க டொலா் 563 மில்லியனை மாணிய உதவியாகவும் வழங்குகின்றது. அத்துடன் இந்தியா அரசாங்கம் இலங்கையின் கல்வி, சுகாதாரம் ,போக்குவரத்து, தொழில்பயிற்சி, பாதை அபிவிருத்தி .கலை, ஆராய்ச்சி, வாழ்வாதாரம் போன்ற துறைகளில் இலங்கைக்கு உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சரும் பிரதம மந்திரியுமான மகிந்த ராஜபக்ச அவா்களின் ஆலோசனையின் கீழ் வீடமைப்பு அமைச்சும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து நாட்டில் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்திய வீடமைப்புத் திட்டம் , பிரதேச செயலாளா் பிரிவுகளில் வீடுகள் அற்ற மக்களை அடையாளம் கண்டு தமது காணியில் அல்லது அரச காணியில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்து வருகின்றது. ஒரு வீட்டினை நிர்மாணிக்கவென வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஒரு வீட்டுக்கு தலா 5 இலட்சம் ருபாவினை உதவியாக வழங்குகின்றது. குறிப்பிட்ட காலத்திற்குள் வீடமைப்பு தொழில்நுட்ப அலுவலகாின் மேற்பாா்வையில் 6 மாதகாலத்திற்குள் மக்கள் பங்களிப்போடு வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. இதனை விட வீடமைப்பு அதிகார சபையும் தமக்கென காணி உள்ளவா்கள் அல்லது தமது வீட்டினை பகுதியாக நிர்மாணித்து பூரணப்படுத்த வசதி இல்லாதவா்களுக்கும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்கி வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்து வருகின்றது. தற்போதைய கொரோனா நோய் பரவலினால் சில பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்தல், கடன் வழங்கும் திட்டங்கள் மந்த கதியில் உள்ளபோதிலும் எதிா்வரும் 2021ல் சகல வேலைத்திட்டங்களும் துரிதமாக முன்னெடுக்கப்படுமென வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இந்திக்க அநுரத்தன தெரவித்தாா்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :