கனரக வாகனம் விபத்து - இருவர் பலத்த காயம்




க.கிஷாந்தன்-
லப்பனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு சென்ற கனரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பிட்டவல பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து ரம்புக்பத்ஓயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
28.12.2020 அன்று காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக கினிகத்தேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும் போதே வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :