முன்னைய அரசாங்கம் வேலைக்குப் பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது - அமைச்சர் இந்திக அனுருத்த



முனீறா அபூபக்கர்-
முன்னைய அரசாங்கம் வேலைக்குப் பதிலாக பழிவாங்கலை மட்டுமே செய்தது, தற்போதைய அரசாங்கம் பழிவாங்கலுக்குப் பதிலாக வேலை செய்வதற்கு முன்னுரிமை அளித்துள்ளது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியில் இருந்தபோது நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராகப் பல கோஷங்கள் எழுந்தன என்றும் இன்று எதிர்க்கட்சிக்கு இது போன்ற எந்தக் கோஷங்களும் இல்லை என்றும் அமைச்சர் கூறினார்.
உண்மையில் மக்களுக்காக செயற்படும் ஒரு அரசாங்கம் இன்று உள்ளது என்று கூறிய அமைச்சர், “அரசாங்கம் தோல்வி” என்பதைக் காட்ட சில முயற்சிகள் இருந்த போதிலும் அரசாங்கம் வெற்றியானதாகவே உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார.
“உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் திவூலப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவின் கெஹெல்அல்ல தெற்கு, பொல்வத்த மற்றும் மடிதியவல கீழ் ஆகிய பிரதேசங்களில் கட்டப்பட்ட 3 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் நேற்று (20) கலந்து கொண்டு மேற்கண்டவாறு உரையாற்றினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடகத்தின் படி இவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வேலைத் திட்டம் நாட்டின் 14,022 கிராம சேவையாளர் பிரிவுகளில் செயற்படுத்தப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :