கேஸ் சிலிண்டரின் தொடர் விலை உயர்வு நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாகப் பாதிக்கும்!விமன் இந்தியா மூவ்மெண்ட் கண்டனம்!

செய்யது இப்ராஹிம் கனி-
மையலுக்குப் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை சகட்டுமேனிக்கு உயர்தியுள்ளதற்கு விமன் இந்தியா மூவ்மெண்ட் (WIM) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விமன் இந்தியா மூவ்மெண்ட் அகில இந்திய தலைவர் திருமதி மெஹ்ருன்னிஸா கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நடுத்தர மக்களின் சிரமங்களைப் புரிந்துக்கொள்ள இயலாத மத்திய பாஜக அரசு, சகட்டுமேனிக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எனவே உயர்த்தப்பட்ட விலையை காலதாமதம் இல்லாமல் மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்.
இலாபத்தை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்ட மத்திய பாஜக அரசு, பாமர மக்களின் குறைவான சிறு வருவாயில் கை வைக்கிறது.

'நல்ல நாட்கள்' (அச்சே தின்) வரப்போகின்றன என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மத்திய பாஜக அரசு, கடந்த 15 நாட்களில் மட்டும் இருமுறை 100 ரூபாய் அளவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ஏற்றியுள்ளது. இந்த மோசமான விலை உயர்வு மாத வருவாயை மட்டுமே நம்பியுள்ள நடுத்தர மக்களையும், அடித்தட்டு ஏழை மக்களையும் கடுமையாகப் பாதிப்பதோடு, விலை ஏற்றத்தால் அவர்களின் வருவாயில் துண்டு விழும்போது ஏற்படும் சிரமங்கள் சொல்லி மாளாது.
இந்த மத்திய பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் விட்டுவைக்காமல் கண்டபடி ஏற்றிவிட்டது. அதேப்போல் பிற வரிகளை அதிகரிப்பதிலும் குறை வைக்கவில்லை. இந்த அரசின் முதல் பதவிக்காலத்திலும், அடுத்து வந்த பதவிக்காலத்திலும் கலால் வரிகளை கண்டபடி ஏற்றி இதுவரை 22 இலட்சம் கோடிகள் அளவுக்கு அதிகப்படியான வருவாயை ஈட்டியுள்ளது.
லாக்டவுன் காலத்தில் பொருளாதாரத்தை சரிவரக் கையாளாத காரணத்தால் வேலைகள் இழப்பாலும், சம்பள வெட்டாலும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி, நாடே பொருளாதாரச் சரிவை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில், மக்களுக்கு மத்திய அரசு நிவாரணங்களை தாராளமாக வழங்கவேண்டிய நேரம் இது.
ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தில் நுகர்வோரின் அளவு 60% ஆக இருக்கும் நிலையில், மக்களின் நுகர்வை அதிகரிக்க வேண்டுமானால் பொருட்களின் விலைகளை குறைத்தால் மட்டுமே சரிவிலிருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்கமுடியும் என்பது பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்ற எவருக்கும் தெரியும். ஆனால் பாஜக அரசு அதற்கு நேர்மாறாக கார்ப்பரேட் நலனில் மட்டுமே முழு அக்கறை கொண்டுள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது 103% கலால்வரி விதிக்கும்போது மாநில அரசுகளோ 38% கலால்வரியை ஒரு லிட்டர் மீது விதிக்கின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தொகை விலையேற்றத்திற்குப் பின் 5 கோடி பயனீட்டாளர்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே மத்திய அரசு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையேற்றத்தால் பாதிப்புள்ளாகி இருக்கும் நடுத்தர மக்கள், ஏழைகள் மற்றும் பாரங்களைச் சுமக்கும் பெண்கள் ஆகியோரின் அவசியத் தேவைகளைக் கருத்தில்கொண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மீது சுமத்தப்பட்டிருக்கும் 100 ரூபாய் விலையேற்றத்தை திரும்பப்பெற வேண்டும் என்று விமன் இந்தியா மூவ்மெண்ட் மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் மீதான விலையேற்றத்தை திரும்பப்பெறுவதன் வாயிலாக மட்டுமே மக்களின் சிரமங்களை குறைக்க இயலும்.
சர்வதேச அளவில் எண்ணெய் விலை மிக மோசமாக சரிவை சந்தித்தபோதும் அதன் பயனை பயனீட்டாளர்களுக்கு மத்திய அரசு வழங்காதது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :