ஜனாஸா விடயத்தில் அரசியல் செய்து சமூகத்தை சிக்கலில் மாட்டிவிடுவோர் இறைதண்டனையை விரைவில் சந்திப்பர் : தே.கா முக்கியஸ்தர் டீ .எம். ஐயூப்


நூருல் ஹுதா உமர்-

மது நாட்டின் முஸ்லிம்களின் அரசியல் கலாச்சாரம் பண்பாடுகள் சிதறிக்கிடக்கின்றது. உணர்ச்சிகளின் ஊடாக வாக்குகளை பெறுவதற்காக தொடர்ச்சியாக அப்பாவி மக்களை குறிவைத்து தாக்குகிறார்கள். 

ஜனாஸா விடையத்தில் எந்தக் கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல்வாதியாக இருந்தாலும் அரசியல் செய்வதாக இருந்தால் அவர்களை இறைவன் நாசமாகட்டும் அடிப்படை உரிமைகளை தாம் வாழும் நாட்டில் தமக்கு கிடைக்க வேண்டிய விடயமாகும். இதை எப்படிப் பெறுவது என்பது இந்த காலகட்டங்களில் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒரு விடயமாக எண்ணத் தோன்றுகின்றது என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் டீ .எம். ஐயூப் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பை ஆதரித்து பௌத்த தேரர்கள் ஜனாதிபதி செயலக முன்றலில் நடத்திய ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடிப்படை உரிமையான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாஸாக்கள் கட்டாயமாக நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் யாருக்கும் இல்லை. ஆனால் ஜனாஸாக்களை வைத்து அரசியல் செய்யும் பச்சோந்தி அரசியல்வாதிகளை பார்க்கின்ற போது உள்ளம் வேதனை அடைகின்றது. சும்மா இருந்த தேரர்களை வீதிக்கு கொண்டுவந்த பெருமை ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம் எம்.பிக்களையே சாரும்.

மக்களை உணர்ச்சி ஊட்டி அதனூடாக வாக்குகளை சூறையாட முஸ்லிங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தும் அரசியல்வாதிகள்தான் தற்காலகட்டத்தில் மக்களிடத்தில் பிரபல்யம் அடைகின்றார்கள்.

இலங்கை சுதந்திரம் பெற்றதற்கு பிற்பாடு ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு பெயர்களில் இனக் கலவரங்களும் மதக் கலவரங்களும் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது அதில் 2020 புதிய வடிவம் எடுத்து கொரோனா வைரஸினால் மரணிக்கின்ற முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்கின்ற ஒரு பிழையான வழிமுறை பின்பற்றப்படுகின்றது. அதை எப்படிக் கையாள்வது அதிலிருந்து நமது மக்களை எப்படி பாதுகாப்பது என்பதுதான் இன்றைய தேவையாக உள்ளது.

ஆனால் அதை விட்டுவிட்டு அந்த விடயத்தை அரசியல் மயப்படுத்தி அதனூடாக இன்னும் எமது முஸ்லிம் சமுதாயத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் ஒரு நிலையை அரசியல் முகவர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் அரசியல் தலைமைகள். மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் தற் காலகட்டத்தில் எதிர்நோக்கும் தேவைப்பாடு முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

அதற்குரிய வழிமுறைகளை எப்படி கையாள வேண்டும் துறைசார் நிபுணர்கள், அரசியல் தலைவர்களை எப்படி கையாண்டால் நமது ஜனாசா நல்லடக்கம் நடைபெறும் என்பதை விட்டுவிட்டு நமது ஈனப்பிறவிகள் அதிலும் அரசியல் சாயம் பூசி வாக்கு தேடுகின்றார்கள். இந்த நாட்டில் பெரும்பான்மையாக சிங்கள மக்களும் அடுத்து தமிழ் மக்களும் அதற்கு பிற்பாடு முஸ்லிம் கிறிஸ்துவ மக்கள் உள்ளனர் இருந்தும் தமிழ் மக்கள் குறுகிய காலம் அகிம்சை வழியிலும் முப்பது வருடம் ஆயுதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு அதனுடைய கடைசி முடிவு பூச்சியமாகவே உள்ளது.

இதை நாம் அனைவரும் நன்கு சிந்திக்க வேண்டிய ஒரு உதாரணமாக நமது நாட்டில் நமது கண்முன்னே நடைபெற்ற ஒரு சம்பவம் உள்ளது.

அதேபோன்றுதான் ராஜதந்திரிகளிடம் நமது விடயங்களை பெறுவதற்காக எப்படி கையாள வேண்டும் என்பதை நமது முஸ்லிம் சமுதாயம், முஸ்லிம் தலைமைகள், உலமாக்கள் நன்கு சிந்தித்து அதை கையாண்டால் மாத்திரமே நமது பிற்காலத்து சமூகம் நிம்மதியாகவும் சுமுகமாகவும் வாழ்வதற்கு நாம் வழிவகுக்கலாம்.

அதை விட்டுவிட்டு போராட்டங்கள் கோஷங்கள் என்று மக்களின் உணர்ச்சிகளை தூண்டி இளைஞர்களின் இரத்தங்களை சூடாக்கி இன்னும் இன்னும் முஸ்லிம் சமுதாயத்தை பின்நோக்கி கொண்டு செல்லும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடுகளில் இருந்து நாம் அனைவரும் விடுபடவேண்டும் தற்காலத்தில் நமது அடிப்படை உரிமையான ஜனாஸா நல்லடக்கம் நிறைவேற்றுவதற்காக அனைவரும் செயற்பட வேண்டும் ஆனால் நான் அறிய ஓரிரு அரசியற் தலைமைகளை தவிர மற்றவர்கள் அனைவரும் வாக்கை பெறுவதற்காக இந்த காலகட்டங்களில் ஈமான் அற்ற மனிதர்களாக செயற்படுகின்றார்கள். அப்படியானவர்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்.

அரசியல் தலைமைகள், சமூக ஆர்வலர்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் இன்றோ நாளையோ நாமும் மரணத்தை சுவைப்போம். அப்போது இறைவனின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது ஜனாஸா விடயத்தில் உண்மைக்கு உண்மையாக எல்லோரும் நடந்து கொள்ளுங்கள். இறைவனின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்றார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :