தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தனது வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாத உரையின் போது வி.கே.வௌ்ளையன் அவர்களை நினைவுகூர்ந்துள்ளார்.
"தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிறுவனர் தொழிற்சங்கத் துறவி அமரர் வி கே வெள்ளையன் அவர்களின் 49வது சிரார்த்த தினமான இன்று மலையக மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேச கிடைத்தமை தொடர்பில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் வி.கே.வௌ்ளையன் அவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்.
இந்த தொழிற்சங்கத்திற்கு தோட்டத் தொழிலாளின் பிள்ளை ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்ற கொள்கையை அவர் உருவாக்கி தலைமை பதவியை தொழிலாளின் பிள்ளை கையில் ஒப்படைத்து சங்கத்தின் நிறுவுனராகவே செயற்பட்ட பெருமைக்கு உரியவர் வி.கே.வௌ்ளையன் ஆவார்.
கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்றபோது விளையாட்டுத்துறை மற்றும் கல்வித் துறையில் அவர் பெற்ற பெறுபேறுகள் மற்றும் திறமைகள் காரணமாக வி.கே.வௌ்ளையனுக்கு பல உயர் இடங்களில் இருந்து தொழில் வாய்ப்புக்கள் வந்தபோதும் அவற்றை எல்லாம் புறந்தள்ளி தொழிலாளர்களின் உரிமைக்காகப் போராடவென தொழிற்சங்கத்தை உருவாக்கிய புரட்சியாளராக இவர் போற்றப்படுகிறார்.
வி.கே.வௌ்ளையன் அவர்கள் கல்வி பயின்ற அதே கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்ற பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் பாராளுமன்றில் இவ்வாறு நினைவுகூர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment