மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது - எம்.பி.ஆர்.புஷ்பகுமார

க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் எதிர்வரும் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர். புஷ்பகுமார கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

" நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் ஒன்று கூடினால் வைரஸ் வேகமாக பரவும் அபாயம் இருக்கின்றது. நெருக்கடி நிலைமை தொடர்பில் சுகாதார தரப்புடன் ஆலோசனை நடத்தினோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதம் நிறைவடையும் வரை சிவனொளிபாத மலைக்கு யாத்திரை வரவேண்டாம் என பக்த அடியார்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

சிவனொளிபாதமலை மூடப்படவில்லை. ஆனாலும் ஜனவரி மாதம் இறுதிவரை நிலைமைகள் அவதானிக்கப்பட்டு, வழிபாடுகளுக்காக பக்த அடியார்களை அனுமதிப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும். தற்போதைய நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தால், சுகாதார நடைமுறைகள் மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் பெப்ரவரி மாதம் முதல் சிவனொளிபாத மலைக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். " - என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :