கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும்.


எப்.முபாரக் -

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்று(4) மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் அழைப்பில் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கோராள ஆகியோரின் இணைத்தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும்.புறவி சூறாவளி தாக்கத்தின் பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாக்க மாவட்ட அரசாங்க அதிபர் என்றடிப்படையில் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கமைய அவசியமான நிறுவனங்களை இணைத்து முன்ஆயத்த செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் அதிஸ்ட்டவசமாக குறித்த புயலின் பாதிப்புக்களில் இருந்து அனைவரும் விடுபட்டமை மிக முக்கியமானதென்று அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வாரி செளபாக்கியா திட்டத்தின் எதிர்வரும் வருடம் 101 குளங்கள் புனர்நிர்மாணம் செயவதற்கான அங்கீகாரம் இதன்போது வழங்கப்பட்டது.

மேலும் சாம்பல் தீவு களப்பினை பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டிய விதம்,சேதன விவசாயத்தை ஊக்கவித்தல்,நீண்டகால குத்தகைக்கென பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் பெறப்பட்ட நோக்கமின்றி காணப்படும்போது அவற்றை உரிய நோக்கத்திற்கு பயன்படுத்த அறிவுறுத்தல் மற்றும் அறவீடுகளை செலுத்த பணித்தல் இல்லாத பட்சம் காணிகளை மீளகப்படுத்தல்,விவசாய உற்பத்தி, கைத்தொழில் அபிவிருத்தி,அரச அனுசரனை வீடமைப்பு திட்டம்,கல்வி அபிவிருத்தி, சுற்றாடல் பாதுகாப்பு உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள்,கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி.மதநாயக்க, மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,பிரதேச செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :