இரண்டு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு தொற்று உறுதி; இதுவரை பொகவந்தலா சுகாதர வைத்திய அதிகாரி பிரிவில் 47 பேருக்கு தொற்று



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நோர்வூட் தமிழ் மகா விதியாலய மாணவர்கள் இருவர் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து இதுவரையில் பொகவந்தலா சுகாதர வைத்திய அதிகாரி அதிகாரப்பகுதியில் 47 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலா பொது சுகாதார அதிகாரி வை.பி.எல்.டி பஸ்நாயக்க தெரிவித்தார்
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த டிக்கோயா இன்சஸ்ரீ தோட்டடத்தில் ஜந்து பேரும், நோர்வுட் வெஞ்சர் கிழ் பிரிவில் பெண் ஒருவருமாக அறுவரும், நோர்வூட் போற்றி தோட்டத்தில் ஒருவர் ,டிக்கோயா பட்டல்கலயில் ஒருவரும் , நோர்வுட் தமிழ்
மகா வித்தியாலயத்தில் தரம் 08 , தரம் 10 இல் கல்வி பயிலும் நோர்வூட் போற்றி தோட்ட மாணவன் , டிக்கோயா பட்டல்கல
தோட்டதை சேர்ந்த மாணவனுமாக பத்து பேர் தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது

26/12/2020 இரவு கிடைக்கப்பெற்ற பி.சி.ஆர் அறிக்கையிலே இவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது

மேலும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த குறித்த ஆறு பேருக்கும் இம் மாதம் கடந்த 24 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனையிலும் வெஞ்சர் கிழ் பிரிவு தோட்டப்பகுதியில் கடந்த வாரம் 40 வயதுடை நபர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருடை குடும்பத்தில் உள்ள முன்று பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது இந்த
இரண்டு மாணவர்களுக்கு தொற்று உருதி செய்யப்பட்டது.

இதே வேளை போற்றி மற்றும் பட்டல்கல தோட்டப்பகுதியில் தொற்றாளர்கள் கொழும்பு பகுதியில் இருந்து
வந்தவர்கள் என்றும் இதுவரையில் 47 பேர்வரை பொகவந்தலா சுகாதார வைத்தியை அதிிகாரி பகுதியில் 47 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

மேற்படி 10 தொற்றாளர்களையும் சுயதனிமை நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இவர்களோடு தொடர்பினை பேணிய 20 குடும்பங்களை சுயதனிமைப்படுத்தவுள்ளதாகவும் பொது சுகாதார அதிகாரி தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :