ரமேஸ்வரன் எம்பியின் தீபாவளி வாழ்த்து செய்தி..

தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கை வாழ் இந்துக்கள் அனைவரும் தீபாவளித் திருநாளை இம்முறை வீட்டிலிருந்தே கொண்டாட வேண்டும். இலங்கையில் வாழும் சக இந்துக்களுடன் எனது இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தீபாவளி கொண்டாட்டத்தை குறைப்போம். எமது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 கொரோனா தொற்று இரண்டாவது தடைவையாகவும் அதி வேகமாக பரவிவருகின்றது. இன்றைய சூழ்நிலையில் இந்த தொற்றிலிருந்து எம்மையும் எமது உறவினர்களையும் நண்பர்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம் பாதுகாப்பு சுகாதார நடவடிக்கைகளை பின் பற்றவேண்டும். அத்தோடு கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் மீண்டுவரவேண்டும். என்பதற்காக மதஸ்தலங்களிலும் வீடுகளிலும் பிராத்தனைகளையும் மேற்கொள்வோம். 

இம்முறை நாம் அனைவரும் வீட்டிலேயே இருந்து தீபாவளியை கொண்டாடுவதனால் நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். மக்களே இம்முறை வீட்டுக்குள்ளேயே தீபத்திருநாளை கொண்டாடுங்கள் என்பதே எனது வேண்டுகோள். அன்று நரகாசுரனை வதம்செய்து அவன் அழிந்த பின்னர்தான் எமக்கு தீபாவளி கொண்டாட கிடைத்தது. இப்பொழுது நாம் நரகாசுரன் போன்ற ஒரு வைரஸின் பிடியில் சிக்கியுள்ளோம். 

இந்த பிடியிலிருந்து உலகளாவிய ரீதியில் மக்கள் என்று விடுபடுகிறார்களோ, அன்றுதான் எமக்குத் சுதந்திரமாக தீபாவளி, புதுவருடம், பொங்கல் அனைத்தும் கொண்டாட வாய்ப்பு ஏற்படும். எமது நாட்டில் இருள் அகன்று ஒளி பிறக்கட்டும். தீபாவளி பண்டிகை அன்று புத்தாடை அணிந்து, இனிப்பு பலகாரங்கள் உண்டு, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடுகிற மலையக மக்கள் வாழ்வில் வளமும், நலமும் பெறட்டும். 

இந்த தீபாவளி திருநாளில் அனைவருடைய துன்பங்களையும் துயரங்களையும் விலக்கி எல்லோருடைய வாழ்விலும் தீப ஒளி தொடர்ந்து கிடைத்திட வேண்டும். நாம் அனைவரும் இந்த தீபாவளியை எளிமையாக கொண்டாடுவோம் எனக் கூறிக் கொண்டு அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :