மருத்துவ கழிவு அகற்றும் உபகரணங்கள் கையளிப்பு

கொ
ய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் யூன் ஹொபிடாடநிறுவனம் நுவரெலியா மாவட்டத்தில் அமுல்படுத்தும் கோவிட் 19
திட்டத்தின் கீழ் மருத்துவ கழிவுகளை தரம் பிரித்து அகற்றுவதற்கான
ஒரு தொகுதி உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று
2020.11.16ம்திகதி நுவரெவியா பிராந்திய சுகாதார சேவைகள்
பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இவ் நிகழ்வானது யூன் ஹொபிடாட் நிறுவனத்தின் பிரதி திட்ட
முகாமையாளர் எஸ்.எல் அன்வர்கான் தலமையில் நடைபெற்றது
இவ் மருத்துவ கழிவு அகற்றல் உபகரணங்கள் பிராந்திய சுகாதார
பணிப்பாளர் வைத்தியர் இமாஸ் பிராதாப்சிங்க மற்றும் பிரந்திய
தொற்று நோயியல் பணிப்பாளர் வைத்தியர்
மதுராசெனவிரத்தனவிடமும் கையளிக்கப்பட்டது.

இத் தொகுதி மருத்துவ கழிவு அகற்றல் உபகரணங்கள்
அன்பளிப்பானது இன்று நாடு எதிர்நோக்கி கொண்டிருக்கும்
கொரோனா தொற்றில் இருந்து முன்னிலை சுகாதார
பணியாளர்களையும் அதேநேரம் மருத்துவ சேவையினை
நாடிவைத்தியசாலைகளுக்கு செல்லும் நோய்யாளர்களையும் மேலும்
தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு உதவியாக இருக்கும் அத்தோடு
இந் நடவடிக்கையானது கோவிட்19 பரவலை தடுப்பதற்கும் அதனை
கட்டுபடுத்துவதற்கும் தேவையான உபகரண தொகுதி என்பது
குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :