நீரோட்டத்திற்கு தடையாயிருந்த மரம்செடிகள் அகற்றப்பட்டன! காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் களத்தில்நின்று கண்ணோட்டம்.காரைதீவு நிருபர் சகா-
காரைதீவு இராணுவமுகாமருகேயுள்ள வெள்ளைப்பாலத்தின் ஊடான நீரோட்டத்திற்கு நீண்டகாலமாகத் தடையாயிருந்த மரம்செடிகொடிகள் கனரகவாகன உதவியால் வெட்டிசாய்க்கப்பட்டு துப்பரவாக்கப்பட்டன.
காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் விடுத்த வேண்டுகோளையேற்று அவர் நேரடியாக களத்திற்கு தனது பணியாளர்களுடன் விரைந்து இப்பணியை மேற்கொண்டார்.
இந்ததடையால் கடந்தகாலங்களில் வெள்ளநீர் ஊருக்குள் தேங்கிநிற்கும் துர்ப்பாக்கியநிலையேற்பட்டிருந்தது.
இப்பாரிய பணியை நேற்றுமுன்தினம் மேற்கொண்டதன்பலனாக தற்போதை மழையால் ஏற்பட்ட வெள்ளம் இலகுவாக வழிந்தோடுகிறது என பொதுமக்கள் நன்றியும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :