அம்பாறை மாவட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை தொடர்பு கொண்டு மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு


பைஷல் இஸ்மாயில் -

னிமைப்படுத்தல் ஊரடங்கு பிரதேசங்களிலுள்ளவர்கள் விஷேட தொலைபேசி இலக்கங்ளை தொடர்பு கொண்டு இலகுவான முறையில் மருந்துப் பொதிகளை பெற்றுக்கொள்ள சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ் தெரிவித்தார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வருகை தரும் நோயாளர்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை நோயாளர்களுக்கான மருந்துகளை பொதி செய்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சேவையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த விஷேட வைத்திய சேவைக்காக, 075 9966441, 067 2052080 ஆகிய விஷேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்பு கொண்டு உங்களின் நோய் தொடர்பில் வைத்தியருடன் கலந்துரையாடி நோய்க்கான மருந்துப் பொதிகளை நீங்கள் இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சையை பெற்றுவந்த நோயாளர்களும் தங்களுக்கான மருந்துப் பொதிகளை குறித்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். குறிப்பாக கிளினிக் நோயாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கிளினிக் பதிவு இலக்கத்தை தெரியப்படுத்தி தங்களுக்கான மருந்துகளை பொதி மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தச் சேவை ஞாயிறு மற்றும் விடுமுறை தவிர்ந்த நாட்களில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும், சனிக்கிழமைகளில் காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணிவரை இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :