முஸ்லீம்களின் கோபத்தைப் புரிந்து கொண்டேன் ஆனால் அடிபணிய மாட்டேன் -பிரான்ஸ் ஜனாதிபதி


பி
ரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்களால் முஸ்லிம்கள் அதிர்ச்சியும் கோபமும் அடைந்திருப்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிவதாகக் கூறியுள்ளார்.

ஆனால், வன்முறையில் ஈடுபட அதை ஒரு காரணமாகக் கூறுவதை ஏற்கமுடியாது என்று அவர் தெரிவித்தார். அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்தார்.

வன்செயல்களுக்கு அஞ்சித் தமது நாடு பின்வாங்கிவிடாது என்று கூறிய மக்ரோன், கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமையைத் தற்காக்கப் போவதாகக் கூறினார்.

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்களும் அதில் அடக்கம் என்றார் அவர்.

ஆனால், அது தாமோ தமது அதிகாரிகளோ அந்தக் கேலிச் சித்திரங்களை ஆதரிப்பதாகப் பொருள்படாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

பிரான்ஸ் முஸ்லிம்களுக்கு எதிரான நாடு அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதே தமது பணி என்று குறிப்பிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி, உரிமைகளைப் பாதுகாப்பதும் தமது பணியே என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :