12 அறைகளைக்கொண்ட லயன்குடியிருப்பு முழுமையாக தீ



க.கிஷாந்தன்-

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிவ்வெளிகம தோட்டத்தின் தொழிற்சாலை பிரிவில் 3ம் இலக்க லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.11.2020) ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பு முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. இதனால் 13 குடும்பங்களை சேர்ந்த 50 இற்கும் மேற்பட்டோர் நிர்க்கதியாகியுள்ளனர்.

அவர்களின் உடமைகளும், முக்கியமான ஆவணங்களும்கூட எரிந்து சாம்பலாகியுள்ளன.

தொழிற்சாலை பிரிவிலுள்ள லயன் குடியிருப்பொன்றில் இன்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர். அதற்கு தீ வேகமாக பரவியது. பிரதேச மக்களை தீயை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்தனர்.

அத்துடன், தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவித்தனர். எனினும், தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் லயன் குடியிருப்பு முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது.

தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விசாரணைகள் இடம்பெறுகின்றன.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது நோர்வூட் பிரதேச சபை ஊடாக செய்யப்பட்டுவருகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :