J.f.காமிலா பேகம்-
முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீனை சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு, தற்போதைய அரசாங்கம் முட்டாள்தனமானது என்று தாம் எண்ணவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றார்.
எந்தவொரு அரச நிகழ்வுக்கும் அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து கலந்துகொள்வதற்கான சிறப்புரிமை அவர்களுக்கு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் நேற்றுமுன்தினம் நடந்த நிகழ்வொன்றில் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் கலந்துகொண்டமையானது அவர் முழுமையாக அரசாங்கத்தில் சேரப்போகின்றார் என்று அர்த்தப்படாது. அவ்வாறு திரிபுபடுத்தவும் கூடாது. நாங்கள் உருவாக்கியிருக்கும் அரசாங்கத்தில் நாங்கள்தான் இருப்போம். இணைவதற்கு வந்தால் துரத்திவிடுவோம் – என்று அமைச்சர் விமல் வீரவன்ச நேற்று நடந்த நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment