ஹஸ்பர் ஏ ஹலீம்-
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை முதல் பாலம்போட்டாறு வரையான பிரதானபாதையில் திஸ்ஸபுர இராணுவத்தினரது ஏற்பாட்டில் தம்பலகாமம் பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச சபையினரது ஒத்துழைப்புடன் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த சிரமதான நிகழ்வானது நாட்டே சுத்தப்படுத்தும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இடம் பெற்றுள்ளது.
இதன் போது "குப்பைகளை போடவேண்டாம்" எனும் கருத்துடனான ஸ்ரிக்கர் பொது இடங்களில் ஒட்டப்பட்டது
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி,பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment