திருகோணமலை மாவட்டத்தில் மின்னியலாளர் தொழிலாளர்களாக சேவையாற்றுபவர்களுக்கு லைசன் வழங்குவது தொடர்பிலான செயலமர்வு


எப்.முபாரக்-

திருகோணமலை மாவட்டத்தில் மின்னியலாளர் தொழிலாளர்களாக சேவையாற்றுபவர்களுக்கு தொழில்துறை உரிமம் லைசன் வழங்குவது தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் செயலமர்வு இன்று (4) திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக்கல்லூரியில் நடைபெற்றது.

மின்னியலாளர்களாக அதிகமானோர் செயற்படுவதாகவும் அவர்களில் அதிகமானோர் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருந்தபோதும் உரிய தொழில்துறைக்கான அனுமதிப்பத்திரம் இன்றி செயற்படுகிறார்கள்.

எதிர்வரும் காலங்களில் இத்துறை தொழில்கள் ஒழுங்குபடுத்தும்போது பதிவு மற்றும் உரிமம் அற்றவர்கள் பல இடர்பாடுகளை எதிர்நோக்கலாம்.எனவே உரிய தொழிலில் ஈடுபடுபவர்கள் குறித்த பதிவு மற்றும் உரிமங்களை பெற கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாக அமைவதாக இதன்போது இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சார்பில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் தெரிவித்தார்.

இத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பதிவுகளை மேற்கொண்டு உரிமம் வழங்கல் தொழில் தகைமை சான்றிதழ் அற்றவர்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கல் போன்ற செயற்பாடுகள் உரிய திணைக்களங்களை இணைத்து இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக இதன்போது இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உதவிப்பணிப்பாளர் திரு. ஜயசூரியன் தெரிவித்தார்.

உரிய பதிவுகளை மேற்கொண்ட பின்னர் உரிமம் பெறுவதற்கான அடிப்படைத்தேவைகள் என்ன அவற்றை எவ்வாறு செய்வது போன்ற பல விடயங்கள் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெறு நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜயனாத் ஹேரத், நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொ. பிரதீபன்,உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :