'சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் சிரமதானம்

பாறுக் ஷிஹான்-


ல்முனை மாநகர சபை எல்லைக்குள் இராணுவத்தினரும் மாநகர சபை மற்றும் கல்முனை பிரதேச செயலகம் இணைந்து நகர சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை இன்று(4) காலை முன்னெடுத்தனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலின் பேரில் 'சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம் பூராவும் பிரதான வீதிகளை மையப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள மருதமுனை நற்பிட்டிமுனை சாய்ந்தமருது உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கல்முனை பிரதேச செயலாளர் எம்.நஸீர் , கல்முனைப் பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் எம்.தர்மசேன, மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் , கணக்காளர் ஏ.எச்.தஸ்தீக் , பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ. எல்.எம் பதுரூத்தீன் ,கல்முனை சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ,பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்கள் ,கிராம சேவையாளர்கள் ,படையதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் குறித்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பட்டதுடன் எதிர்காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் குப்பை கூழமில்லாமல் சுத்தமாக பேணுவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :