பஸ்தரிப்பு நிலைய சட்டவிரோத செயல்களுக்கு ஆப்பு!பொலிசாரின் துணையோடு காரைதீவு தவிசாளர் ஜெயசிறில் அதிரடி.


காரைதீவு சகா-

காரைதீவு பிரதானவீதியில் தேவாலயத்திற்கு முன்பாகவுள்ள பஸ் தரிப்பு நிலையத்தில் அண்மைக்காலமாக அரங்கேறிவந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக அங்கு இடம்பெற்றுவரும் சட்டவிரோதசெயற்பாடுகள் தொடர்பாக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு முறைப்பாடுகள் தகவல்கள் கிடைத்துவந்தன.

அதனையடுத்து நேற்று திடிரேன சம்மாந்துறை பொலீஸ் அதிகாரிகளின் துணையுடன் ஸ்தலத்திற்கு விஜயம் செய்த தவிசாளர் ஜெயசிறில் அங்கிருந்தவர்களை கையும் மெய்யுமாக பிடித்தனர். கூடவே பிரதேசசபை உறுப்பினர்களான த.மோகனதாஸ் எஸ்.சசிக்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

பொலிஸார் அங்கிருந்த அவர்களுக்கு பலத்த எச்சரிக்கை விடுத்து இனிமேல் இவ்வாறான விரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜராக்கவேண்டிவருமென்றும் எச்சரித்தனர்.

அங்கிருந்த வாகனம் தரிக்கக்கூடாது என்ற 'நோபாக்கிங்' சைகைப்பலகைகள் காணாமல்போயுள்ளதோடு பஸ்பயணிகள் அங்கு தரித்துநிற்காதவகையில் உள்ளிருந்து புகைபிடித்தல் மதுபானம் அருந்துதல் காட்ஸ் விளையாடுதல் நித்திரைசெய்தல் போன்ற காரியங்களில் சிலர் ஈடுபட்டும் வந்துள்ளனர்.

சபை ஊழியர்கள் அங்குசென்று அறிவித்தும் அவர்கள் அசையவில்லை. அதனையடுத்து தவிசாளரின் இந்த அதிரடி நடவடிக்கையையடுத்து தற்போது அப்பஸ்தரிப்புநிலையம் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.நிலையத்திற்கு முன்னால் கல் மண் ரிப்பர்கள் தரித்து நிற்கமுடியாதவாறு கட்டளையிடப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :