J.f.காமிலா பேகம்-
நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான விஜேதாசவுக்கு 5 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், தற்போது 2 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு கடமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக விஜேதாச ராஜபக்சவும் கடும் எதிர்ப்பினை பொது இடங்களிலும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment