தென் கிழக்குப் பல்கலை விரிவுரையாளர், விபத்தில் சிக்கி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்...!



ஒலுவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் சம்பவம்...!

 தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தில் சிரேஷ்ட்ட விரிவுரையாளராக கடமையாற்றி வரும் மருதமுனையச் சேர்ந்த விரிவுரையாளர் ஏ.எம்.றியாஸ் அகமட், இன்று காலை (24.09.2020) கல்முனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் செல்லும் பிரதான வீதியில், களியோடைப் பாலத்தினை தாண்டிய பகுதியில் வாகனத்தை செலுத்திச் சென்ற வேளை, வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, பிராதான வீதியின் அருகில் உள்ள அணைக்கட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.   

இதனால், விரிவுரையாளர் காயங்களுடன் நிந்தவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 கார் பலத்த சேதங்களுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :