எதிர்வரும் 2022ஆம் ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வுபெறவுள்ளார் என்ற தகவல் வெளியாகியிருந்தது.
எனினும் இதுகுறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவே கருத்து கூறியுள்ளார்.
இது மிகவும் பொய்யான தகவல் என்று கூறிய அவர், 5 வருடங்களுக்கு தன்னை நாடாளுமன்றத்தில் இருக்கும்படியே மக்கள் ஆணை வழங்கியிருப்பதாகவும், அதற்கு முன்னதாகவே ஓய்வுபெறும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
கடந்த வாரம் பிரபல ஊடகமொன்றில், பிரதமர் மஹிந்த இன்னும் இரண்டு வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
அதன் பின் புதிய பிரதமராக அவரது இரண்டாவது சகோதரரான பெஸில் ராஜபக்ச நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment