ரணிலே தலைவர்’ – 75ஆவது ஆண்டில் ஐக்கிய தேசியக்கட்சி



J.f.காமிலா பேகம்-
லங்கையில் 4 நிறைவேற்று அதிகார ஜனாதிபதிகள் மற்றும் 7 பிரதமர்களை உருவாக்கிய பழமையான அரசியல் கட்சியான, ஐக்கிய தேசியக்கட்சி இன்று 6 ஆம் திகதி 74ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடவுள்ளது.
இதற்காக சிறிகொத்தவில் சர்வமத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
1994 ஆம் ஆண்டு முதல் 26 வருடங்களாக ஐ.தே.கவின் தலைவராக செயற்படும் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின்கீழ்தான், 75ஆவது ஆண்டிலும் அக்கட்சி காலடிவைக்கின்றது.

எனினும், இம்முறை தலைமைப்பதவியில் மாற்றம் ஏற்படுவது உறுதியென ஐ.தே.க. உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1946 ஆம் ஆண்டு டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஐக்கிய தேசியக்கட்சியானது, 1947 முதல் 2020 வரை இலங்கையில் நடைபெற்றுள்ள 16 நாடாளுமன்றத் தேர்தல்களில் 8 இல் வெற்றிபெற்று ஆட்சியமைத்துள்ளது.

அத்துடன், 8 ஜனாதிபதி தேர்தல்களில் மூன்றில் வெற்றிவாகை சூடியுள்ளது.
எனினும், நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வரலாறு காணாத பின்னடைவு ஏற்பட்டது.

வாக்களிப்புமூலம் ஒரு உறுப்பினர்கூட தெரிவாகவில்லை. தேசியப்பட்டியல் ஊடாகவே ஓர் ஆசனம் கிடைக்கப்பெற்றது.

அந்த ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் கட்சிக்குள் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :