தேர்தல் பரப்புரைகளின் போது தமது தலைமையும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் வெற்றி பெறும் பட்சத்தில் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக நியமனம் பெறுவார் எனும் பரப்புரையை தமது கட்சி மக்கள் மத்தியில் முன்னிறுத்தியதாகவும் , எவ்வகையான அமைச்சு நாளைய தினம் கிடைக்கப் பெற உள்ளது என்பது தொடர்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என தெரிவிப்பதுடன்,
தற்போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் நாளை கண்டியில் நடைபெறும் பதவிப்பிரமாண நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையிலான சட்டரீதியான அனுமதியை பெற்றுக் கொள்வதற்கான நகர்வுகளை தமது கட்சி முழுமூச்சுடன் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை தற்போது விளக்கமறியலில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் விரைவில் பிணையில் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் , அதுவரை அவர் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்படுவதுடன் , பிணை வழங்கப்பட்டதற்கு பிற்பாடே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக அவர் நியமனம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதுவாகினும் கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதிகளுக்கு அமைய நாளைய தினம் முக்கியமான அமைச்சுப் பொறுப்பு அரசாங்கத்தினால் பிள்ளையானுக்கு வழங்கப்படும் எனும் தகவல் உறுதியாகியுள்ளது.
இத்தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே தனது வாக்கினை கூட அளிக்காமல் , ஒரு மேடையில் பேசாமல் , மக்களை சந்திக்காமல் 67000 மக்களது நம்பிக்கையை வென்ற ஒரு இமாலய தலைவனாகவும் , தனிப்பட்ட வகையில் சுமார் 54,198 விருப்பு வாக்குகளை சுவீகரித்துக் கொண்ட மக்கள் நாயகனாகவும் மட்டு வாழ் தமிழர்கள் மத்தியிலே முன்னாள் முதல்வர் பிள்ளையான் திகழ்கிறார்...
இதற்கான காரணம் கடந்த பதவிக்காலத்தில் அவர் செயற்பட்ட விதமும் , நிகழ்காலத்தில் மக்களது எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்கின்ற அத்தனை தகுதியும் இவருக்கே உரித்தானதாக மட்டக்கப்பு வாழ் தமிழ் மக்கள் அடையாளப்படுத்தியதுமே ஆகும்...
நாளைய அமைச்சருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்...
0 comments :
Post a Comment