மூவின மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சமாகவும் வாழ வேண்டி சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில், துஆ பிரார்த்தனை


எஸ்.அஷ்ரப்கான்-
மூவின மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சமாகவும் வாழ வேண்டி சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில், துஆ பிரார்த்தனை இடம் பெற்றது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அபார வெற்றியினூடாக இலங்கையில்
மூவின மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சமாகவும், யாவரையும்
அரவணைத்து தங்களது ஆட்சியினை மேற்கொள்ளவும், நாட்டு மக்களுக்காகவும் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில், சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா தலைமையில்
நேற்று (10) மஃரிப் தொழுகையை தொடர்ந்து துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.

அல் ஹாபில் மௌலவி எம்.ஐ.எம். ரியாஸ் (அல்-தாபி) இந்த துஆ பிரார்த்தனையை நடாத்தினார்.இதில் முன்னாள் பிரதேச செயலாளரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம்.சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பள்ளிவாயல் மரைக்காயர்மார்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :