திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
புலியூத்துக் குளம் பகுதியில் நோய்வாய்ப்பட்டுள்ள காட்டு யானையொன்றுக்கு வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும்,பிரதேச பொது மக்களும் இணைந்து தினமும் உணவளித்து வருகின்றார்கள்.
சுமார் நாற்பது வயதுடைய காட்டு யானையொன்றே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ள நிலையில் நடக்க முடியாது புலியூத்துக் குளம் பகுதியில் இவ் காட்டு யானை இருக்கின்றது.
இக் காட்டு யானைக்கு வன ஜீவராசி உத்தியோகத்தர்கள் மருந்துகள் வழங்கி பராமரித்து வருவதோடு,
இவ்காட்டு யானையை பிரதேசத்திலுள்ள அனைவரும் பார்வை இட்டு உணவளித்து வருகின்றார்கள்.
0 comments :
Post a Comment