தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் பாரிய தீ. 24 வீடுகள் முற்றாக சேதம்.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகலை நடுகணக்;கு தோட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்று நேற்று (11) இரவு 10 மணியளவில் தீ பற்றிக்கொண்டத்தில் அக்குடியிருப்பில் உள்ள 24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களைச் சேர்ந்த 70 பேர் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

த்தீயினை பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தொழிலாளர்களின் அத்தியவசிய ஆவனங்கள்,தங்;க நகைகள் உடுதுனிகள்,தளபாடங்கள்,உட்பட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீவிபத்து ஏற்படும் போது தீயணைக்கும் பிரினரோ அல்லது கருவிகளோ உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாததன் காரணமாக தீ கட்டுப்படுத்த முடியாது போவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

இந்த தீவிபத்தில் எவருக்கும் காயங்களோ உயிராபத்தோ ஏற்படவில்லை.
குறித்த தீப்பரவல் மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தோட்ட நிர்வாகமும் கிராம சேவகரும் இணைந்து சமைத்து உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பவவிடத்திற்கு அக்கரபத்தனை பிரதேச சபையின் தலைவர் கதிர்ச்செல்வன் வருகை தந்து பொது மக்களுக்கு தேவையான அத்தியவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

தீ விபத்து ஏற்படுவதற்கான காரணத்தினையும் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :