பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பதன் மூலமாகவே சிறுபான்மை மக்களின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன வேற்பாளர் கபில அத்துக்கோரள தெரிவித்தார்.


எப்.முபாரக்-
பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிப்பதன் மூலமாகவே சிறுபான்மை மக்களின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்ள முடியும் என திருகோணமலை மாவட்ட பொதுஜன பெரமுன வேற்பாளர் கபில அத்துக்கோரள தெரிவித்தார்.

கந்தளாய் பேராறு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம்
நேற்று திங்கட்கிழமை (6) மாலை நடைபெற்ற போது முஸ்லிம் மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
வாக்களித்த மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் அதற்காகத்தான் மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்புகின்றார்கள் பொது மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படல் வேண்டும்,
தற்போது ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்து இரண்டு திசைகளில் அலைமோதித் திரிகின்றது இனிமேல் ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெரும் என்பது பொய் கதையாகி விட்டது.

இனிமேல் பொதுஐன பெரமுனவின் ஆட்சியே தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ந்து நீடிக்கும்.

பெரும்பான்மையான சிங்கள மக்கள் பொதுஜன பெரமுனவின் பக்கம் திரும்பி விட்டார்கள்,அதேபோன்று சிறுபான்மை சமூகமும் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க வேண்டும் தற்போதைய நிலையில் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ அளிக்கும் வாக்குகள் செல்லுபடியற்ற வாக்குகள் போன்றது காரணம் தோல்வியுறும் கட்சிக்கு வாக்களித்து என்ன பிரயோசனம் !இம்முறை நடைபெறவுள்ள தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை கைப்பற்றுவோம் திருகோணமலை தேர்தல் தொகுதியில் முன்னால் இராஜங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேயும்,சேருவிலவில் நானும் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் இருக்கின்றனஅனைத்தையும் ஆட்சி செய்யும் அரசோடு இருந்தால்தான் வெற்றியடைய முடியும் சிறுபான்மை மக்கள் வாறுங்கள்கைகோர்த்து ஒன்றாக பயணிப்போம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -