கருணா அம்மான் வென்று விட்டார்- த.தே.கூட்டமைப்பினர் பிரச்சாரத்தை நிறுத்தி எம்முடன் இணையுங்கள்- கோபாலகிருஸ்ணன்

காரைதீவு சகா-


ம்பாறை மாவட்டமெங்கும் அம்மான் அலை முழுவீச்சோடு வீசுகிறது. அவரது வெற்றி நூறுவீதம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே இப்புனித மண்ணின் கௌரவத்தைக் காப்பாற்ற தவிசாளர் ஜெயசிறில் மற்றும் மோகன் நேசராசா காண்டீபன் கோபிகாந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் தயவுசெய்து த.தே.கூட்டமைப்பிற்கான பரப்புரையை இன்றோடு விட்டுவிட்டு எம்மோடு இணையுங்கள். அல்லது அமைதியாகுங்கள்.
இவ்வாறு அகில இலங்கை தமிழர் மகாசபைத்தலைவர் தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் பகிரங்கமாக வேண்டுகொள்விடுத்தார்.

காரைதீவில் தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட வேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனை ஆதரித்து
காரைதீவு கடற்கரைவீதியில் இடம்பெற்ற அ.இ.த.மகாசபையின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசுகையில் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
மாவட்டமெங்கும் என்றுமில்லாத ஒரு புரட்சிஅலை வீறுகொண்டு நடைபோடுகின்றது. இளைஞர்கள் எக்கச்செக்கமாக வந்துகுவிகிறார்கள். படித்தவர்கள் புத்திஜீவிகள் அனைவரும் அணிதிரண்டுள்ளனர்.

இறுதியாக வந்த பியசேன மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர் தங்களை வளர்த்தார்களே தவிர மக்களுக்கு ஏதும் செய்யவில்லை. நாசமாய்ப் போவானுகள் கடந்த நாலரை வருடங்கள் வீணாக காலத்தைக்கழித்துவிட்டு வாக்களித்த மக்களையும் ஏமாற்றிவிட்டு இன்று மீண்டும் வருகிறார்.

என்னமுகத்தோடு அவர் வாக்குக்கேட்டு வருகிறார். என்ன தகுதி உரிமை இருக்கிறது.பெயருக்கு ஒரு விஞ்ஞாபனம். அதில் ஒன்றையாவது நிறைவேற்றமுடிந்ததா? வெளிநாட்டுப்பயணம். நிதிச்சேகரிப்பு அவ்வளவே.

தமிழ்மக்கள் தன்மானத்தை இழக்காது அரசியல்தீர்வுடன் அபிவிருத்திப்பாதையில் பயணிப்பதே எமது இலட்சியமாகும். தீர்வு தீhவு என்று காலத்தை கடத்தியதுதான் மிச்சம். ஒவ்வொரு 5வருடங்களுக்கும் வந்துபோகும் வேட்டிகளை இன்னும் நம்பினால் நாம் நடுக்கடலில் தத்தளிக்கவேண்டிவரும்.

கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் மாவையும் கொடுத்து கடந்தமுறை செய்ததுபோன்று வாக்கெடுக்கலாம் என்று கனவுகாண்கிறார். இம்முறை அந்தப்பாச்சா பலிக்காது. மக்களை ஒருதடவைதான் எமாற்றலாம். இனி ஏமாறப்போவது அவரே.எனவே இனியாவது நாம் சிந்தித்து எமது இருப்பை பாதுகாக்க தானைத்தளபதியாக கடவுள் கொண்டிறக்கிய கருணா அம்மானை ஆதரிக்க கப்பல் சின்னத்திற்கு வாக்களிப்போம். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :