கட்டிட உரிமையாளரின் முன்மாதிரியை பாராட்டி கௌரவிப்பு.


எம்.என்.எம்.அப்ராஸ்-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே நெருக்கடியான நிலையில் காணப்பட்டது.இந் நிலையில்
பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பொது மக்கள் மற்றும் ஏனையோருக்கு வழங்கி வந்தனர்.  இந்த வகையில் கல்முனை BCAS Campus கல்வி வளாகத்தின் கட்டிடத்தின் வாடகையினை கணிசமான
தொகையை கட்டிட உரிமையாளர் தள்ளுபடி செய்திருந்தார் இதனை முன்னிட்டு கட்டிட உரிமையாளரின் இம் முன்மாதிரியை கௌரவிக்கும்
முகமாக BCAS Campus (பீகாஸ் கெம்பஸ்) கல்முனை கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் நிகழ்வொன்று இன்று( 07) நடைபெற்றது.

இந்நிகழ்வானது BCAS Campus கல்வி நிலையத்தின் கல்முனை வளாகத்தின் முகாமையாளர் பொறியியலாளர் என்.ரி.ஹமீட் அலி தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்து சிறப்பித்தார்.
இதன் போது இங்கு கலந்து கொண்டு பிரதம அதிதி எம்.எம்.நஸீர் அவர்கள் உரை நிகழ்த்துகையில்
கொரோனா காரணமாக பொது மக்கள் பல துன்பங்களை அனுபவித்தனர் என்பதை நாங்கள் அறிவோம் இவ் இடர் நிலையில் மக்களுக்கு பல்வேறான உதவிகளை பலரும் மேற்கொண்டர்.குறிப்பாக இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய கட்டிட உரிமையாளர்களுக்கும் முன்மாதிரியாய் அமையும் இவ் உன்னதமான பணியினால் பலர் நன்மைடைந்துள்ளார்கள் என்பதனையும் தெளிவு படுத்தியதோடு இவ் உயரிய பணிக்கு பங்களிப்பு செய்த கட்டிட உரிமையாளருக்குபாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் இவர்களின் பங்களிப்பை வழங்க காரணமாக இருந்த கட்டிட உரிமையாளர் மர்ஹும் அல்ஹாஜ் எச்.எல்.ஏ.ஜப்பார் அவர்களின் புதல்வர்களுக்கு BCAS Campus கல்வி நிறுவனத்தினால் நினைவுச்சின்னமும் புலமைப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -