எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலக எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்தார்.
மத்துகம பிரதேசத்தில் பாலித்த தெவரப்பெருமவின் உருவம் அடங்கிய பாதாதை காட்சிப்படுத்தப்பட்ட நிலையில், அதனை அகற்ற நேற்று பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
குறித்த இடத்திற்கு பாலித்த தெவரப்பெருமவின் பாரியார் சென்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இதனிடையே தனது மனைவியை அங்கிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் பிடித்து தள்ளியதாகவும் ,அதனையடுத்து அவர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பாலித்த தெவரப்பெரும கூறினார்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவது குறித்து வரும் தினங்களில் தேர்தல் ஆணைக்குழுவிடம் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.