சாய்ந்தமருது-
தமிழ் மக்களின் குரல் பாராளுமன்றத்திலும், சர்வதேசத்திலும் ஓங்கி ஒலிப்பதென்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரக்குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம், சிறீதரன், விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா போன்ற முதுகெலும்புள்ள தமிழ் தலைவர்கள் வெற்றிபெற வேண்டும்.
தங்களுக்கிடையில் இருக்கின்ற முரண்பாடுகளுக்கு அப்பால் இவர்கள் அனைவரும் ஒன்றாக பாராளுமன்றத்தில் அமர்ந்தால் அது எதிர்கட்சி வரிசைக்கு அதிக பலம் சேர்ப்பதுடன், அரசின் சர்வாதிகார போக்கினை கேள்விக்குட்படுத்த முடியும்.
அத்துடன் வடகிழக்கில் தொல்பொருள் ஆராய்ச்சி என்றபோர்வையில் திட்டமிடப்படுகின்ற சிறுபான்மை மக்களின் காணிகளை சுவீகரிக்கும் முயற்சியையும் தடுத்துநிறுத்த முடியும்.
இவர்களிடம் காணப்படுகின்ற துணிச்சலும், அரசியல் அறிவும், தன் இனத்தின் மீதான பற்றுதலும் வியக்கத்தக்கது. அது வடகிழக்கு மக்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.
முஸ்லிம் அரசியலை பொருத்தமட்டில் அது வியாபார மயப்படுத்தப்பட்ட கொந்தராத்து அரசியலாகவும், சந்தர்ப்பவாத அரசியலாகவும், தேர்தலை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுகின்ற அரசியலாகவும், ஒரு சில வர்க்கத்தினர்கள் சொத்துக் குவிக்கும் அரசியலாகவும் மாறியுள்ளதனால் முஸ்லிம் அரசியல் பற்றி உறுதியாக எதுவும் கூற முடியாதுள்ளது.