அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிண்ணியா நகர சபை உறுப்பினர் ஏ.எம்.ஹாரீஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்றைய தினம்(1) இணைந்து கொண்டார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் வேற்பாளரும் திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் முன்னிலையில் கட்சியில் இணைந்து கொண்டார்.
இவர் ஐக்கிய மக்கள் சத்தியின் வேற்பாளர் எம்.எஸ்.தௌபீக்கின் வெற்றிக்காக பாடுபடவுள்ளார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைத்துவம் மற்றும் திருகோணமலை மாவட்ட முன்னால் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப்பின் புரக்கணிப்பே தாம் கட்சி மாறுவதற்கான காரணம் எனவும் தெரிவித்தார்.